பரியேறும் பெருமாள் படத்தின் நடிகர் கதிர்-க்கு விஜய் சேதுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் இந்தப் படத்தை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் காலா பட இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாளை இந்தப் படம் ரிலீசாக இருக்கும் நிலையில் படத்தைப் பார்த்த திரைத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.
படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி நடிகர் கதிருக்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், ``பரியேறும் பெருமாள் படம் தமிழ் சினிமாவின் சுடர்விடும் புதிய பயணத்தை தொடக்கி வைத்திருக்கிறது. மாரி செல்வராஜின் இயக்கம் சிறப்பு. நிஜத்திலிருந்து தழுவப்பட்ட அரிதான திரைப்படம். இந்தப் படம் என்னை ஆழமாக பாதித்தது. படம் முடிந்த பின்னரும் பல மணி நேரம் என்னுடன் பயணித்தது. கதிரின் நடிப்பு உணர்ச்சிப்பூர்வமானது" என்று கூறியுள்ளார்.
படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் ராம், ``அரசியல் ரீதியாக, உணர்வுபூர்வமான படம் . திருநெல்வேலியை மிக அழகாக இயக்குநர் பதிவு செய்து உள்ளார். 10 வருடங்களில் சிறந்த படம் என உறுதியாக சொல்ல முடியும்” என்று கூறினார்
நடிகர் யோகிபாபு : தரமான படத்தில் நடித்தது மகிழ்ச்சி. ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு இது போன்ற கதையில் நடித்தது மகிழ்ச்சி. கமெர்சியல் படத்தைத் தாண்டி இது போன்ற படத்தில் நடித்தது மகிழ்ச்சி. குணசித்திர கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆவலாக உள்ளேன்.
இயக்குநர் நவீன் : வாழ்வியலை அழகாக படம்பிடித்து காண்பித்துள்ளார் இயக்குநர் மாரிசெல்வராஜ். அடித்தட்டு மக்களின் தேவைகளை பேசும் படமாக அமைத்துள்ளது.
இயக்குநர் லெனின் பாரதி: தரமான படைப்பு. சாதிய வக்கிரங்களை விலக்கி வேறுதளத்தில் பயணிக்கும் வகையில் எடுக்க உதவும்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் : தரமான படத்தை மக்கள் திரையில் பார்த்தால் மட்டும் தான் படம் வெற்றி பெறும். சமூகத்திற்கு தேவையான படம். வலியை ஏற்படுத்தும் ஆனால் திணிக்காமல் எதார்த்தத்தை பதிவு செய்து உள்ளனர்.
இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி: எழுத்தாளராக இயக்குனர் சாதித்துள்ளார். சில படங்கள் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும். கருப்பி பாடல் ஆத்மார்த்தமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Siddharth, Mari selvaraj, Pariyerum perumal, Pariyerum perumal Review, Vijay sethupathi