முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை அள்ளிய ‘பரியேறும் பெருமாள்’!

சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை அள்ளிய ‘பரியேறும் பெருமாள்’!

 இயக்குநர் ரஞ்சித் (இடது) உடன் இயக்குநர் மாரி செல்வராஜ் (Twitter)

இயக்குநர் ரஞ்சித் (இடது) உடன் இயக்குநர் மாரி செல்வராஜ் (Twitter)

Pariyerum Perumal Screened In Goa IFFI And Receives Good Reviews Across Nation | கோவாவில் நடைபெறும் வரும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ படம் ஏராளமான பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’ படம் சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றது.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இயக்குநர் ராம்-ன் உதவி இயக்குநரும் அறிமுக இயக்குநருமான மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

Pariyerum Perumal
சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் படக்குழு

கோவாவில் தொடங்கியுள்ள 49-வது சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் ‘பரியேறும் பெருமாள்’ திரையிடப்பட்டது. சமூகத்தின் முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான பிரச்னையை பேசியுள்ள இந்தப் படம், பிற மாநில பார்வையாளர்களையும், சர்வதேச பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதுகுறித்த புகைப்படங்களை நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் பார்க்க...

First published:

Tags: IFFI, Pa. ranjith, Pariyerum perumal