• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சர்வதேச திரைப்பட விழாவுக்குச் செல்லும் பரியேறும் பெருமாள் - பா.ரஞ்சித் மகிழ்ச்சி

சர்வதேச திரைப்பட விழாவுக்குச் செல்லும் பரியேறும் பெருமாள் - பா.ரஞ்சித் மகிழ்ச்சி

பரியேறும் பெருமாள் பட போஸ்டர்

பரியேறும் பெருமாள் பட போஸ்டர்

கோவாவின் 49- வது சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு 'பரியேறும் பெருமாள்' தேர்வாகியுள்ளது. இதை படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கோவாவின் 49- வது சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு 'பரியேறும் பெருமாள்' தேர்வாகியுள்ளது. இதை படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த படம் பரியேறும் பெருமாள். நடிகர் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

    சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் கொண்டாடி வருகின்றனர். மேலும், இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “கோவாவின் 49- வது சர்வதேச திரைப்பட விழாவுக்கு 'பரியேறும் பெருமாள்' தேர்வாகியுள்ளது. மகிழ்ச்சி " என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்க பதிவில், “வாழ்த்துக்கள் இன்னும் உயரங்கள் தொடட்டும்” என்று வாழ்த்தியுள்ளார். அவரைத் தொடர்ந்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபனும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

    அடுத்த மாதம் நவம்பர் 20-ம் தேதி 49-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக இந்த வருடம் 190 முழு நீள இந்திய திரைப்படங்கள் போட்டியிட்டன. இவற்றில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட வேண்டி 22 இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகி உள்ளன. இதில் தமிழில் 4 படங்கள் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: