• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • யாவருக்கும் நன்றி... பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் நெகிழ்ச்சி பதிவு..

யாவருக்கும் நன்றி... பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் நெகிழ்ச்சி பதிவு..

 பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள்

குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை பற்றிய கேள்வி இடம் பெற்றது குறித்து படத்தின் இயக்குனர் நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் பரியேறும் பெருமாள்.இந்த படத்தில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சாதி மற்றும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில் முன்னேற துடிக்கும் இளைஞனின் பிரச்சனை எடுத்துக்கூறும் படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் அமைந்தது.

    இந்த திரைப்படம் பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் நீங்கா இடத்தை பிடித்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் திகழ்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் இன்று நடைப்பெற்ற குரூப் 1 தேர்வு கேள்வியில் இந்த படம் பற்றிய கேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது. அந்த கேள்வியில் ‘தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்து கீழ்காணும் கூற்றுகளில் தேர்வு செய்யவும்’ என்றுக் கூறி சில ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து அந்த தேர்வு வினாத்தாள் இணையத்தில் வைரலான நிலையில் பரியேறும் பெருமாள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.


    இந்நிலையில் படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ‘பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது. இனி அது மானுட சமூகத்தின் பிரதி. யாவருக்கும் நன்றி’எனக் கூறியுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: