• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு இவ்ளோ பெரிய மகனா ? வைரலாகும் புகைப்படம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு இவ்ளோ பெரிய மகனா ? வைரலாகும் புகைப்படம்

சுஜிதா

சுஜிதா

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சுஜிதா தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
ரசிகர்களை ஈர்க்கும் வகையில் பல நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் சீரியல்களுக்கு இருக்கும் தனி வரவேற்பு காரணமாக சேனல் நிர்வாகம் ஏரளமான சீரியல்களை திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பி வருகிறது. விஜய் டிவி சீரியல்களில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். முதலிடத்தில் இருந்த பார்தி கண்ணம்மா சீரியலை பின்னுக்கு தள்ளி சமீபத்தில் தான் மீண்டும் ரேட்டிங்கில் டாப்பிற்கு வந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அண்ணன் - தம்பி பாசம் மற்றும் கூட்டு குடும்பத்தை கதைக்கருவாக கொண்டு 2018 முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் தனலட்சுமி சத்யமூர்த்தி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை சுஜிதா தனுஷ். கணவர் சத்யமூர்த்தியை ஒரு இக்கட்டான சூழலில் கரம் பிடிக்கும் தனலட்சுமி, அவரது மூண்டு தம்பிகள் மற்றும் மாமியாரை பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறார். தங்களுக்கென்று குழந்தை வேண்டும் என்று கூட யோசிக்காமல் சத்யமூர்த்தி - தனலட்சுமி தம்பதியர் ஜீவா, கதிர், கண்ணன் மூவரையும் தங்கள் குழந்தைகளாக நினைத்து வளர்த்து வருகின்றனர்.கணவரின் தம்பிகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து ஆளாக்கும் தானம் கேரக்டரில் நடித்து, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அண்ணி என்றால் இப்படி தான் குடும்ப வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் தற்போது சீரியலில் கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் நடிகை சுஜிதா. நடிகை சுஜிதா தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே நன்கு பரிச்சயமானவர். காரணம் கைக்குழந்தையாக இருந்த போதே அப்பாஸ், முந்தானை முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் தோன்றி வெள்ளித்திரையில் அறிமுகமானவர்.பின்னர் புதுயுகம்,மந்திர புன்னகை, மனக்கணக்கு, பூவிவழி வாசலிலே, காதல் பரிசு, மனிதன், அன்புள்ள அப்பா, பாடு நிலாவே, பேர் சொல்லும் பிள்ளை, முத்துக்கள் மூன்று, புதிய வானம், அழகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மனதில் பதிந்தவர். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியிலும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி இருக்கிறார் நடிகை சுஜிதா.

ஒரு பெண்ணின் கதை மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்த சுஜிதா, உறவுகள், அக்கா தங்கை, பிருந்தாவனம், கணவருக்காக, மருதாணி, விளக்கு வச்ச நேரத்துலே, ஒரு கை ஓசை, பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் உட்பட ஏராளமான சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர்.கேரளாவைச் சேர்ந்த நடிகை சுஜிதா, விளம்பரத் திரைப்படத் தயாரிப்பாளர் தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறான். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை சுஜிதா. மேலும் கதகேளு கதகேளு என்ற யுடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். 
View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

இதனிடையே தானும் தனது மகனும் ஒரே டிசைன் மற்றும் ஒரே கலர் அணிந்திருக்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டா பேஜில் சுஜிதா ஷேர் செய்துள்ளார். சேம் டூ சேம் என்ற கேப்ஷனிட்டு இவர் ஷேர் செய்துள்ள போட்டோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. தவிர நம்ம தனத்திற்கு நிஜ வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மகன் இருக்கிறானா என சுஜிதாவின் மகனை முதல் முறை பார்க்கும் ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: