வளைகாப்பு விழாவுடன் களைகட்ட போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் எபிசோட்களில் சீமந்த நிகழ்ச்சிகள் ஆரம்பமாக போகிறது என்ற செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

  • Share this:
விஜய் டிவி தொலைக்காட்சியில் முக்கிய கதாநாயகி, வில்லி கதாபாத்திரம் மற்றும் பழிக்கு பழி வாங்கும் கதைக்களம் ஆகியவை இல்லாமல் "எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை" என பாடும் அளவுக்கு ஒரு சீரியல் இருக்கிறது என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் தான். அண்ணன் தம்பிகள் ஒன்றாக சேர்த்து கூட்டுக் குடும்பமாக வாழ்க்கையை நடத்தி வரும் கதைக்களம் தான் இந்த சீரியல். இந்த சீரியல் ஆரம்பமானதில் இருந்தே ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

கணவனின் தம்பிகளை தன் பிள்ளைகளாகவே என்னும் பாசக்கார அண்ணி, அண்ணா மற்றும் அண்ணியை தாய், தந்தையாக மதிக்கும் தம்பிகள் என பாச பிணைப்பில் மற்ற சீரியலைகளை பின்னுக்கு தள்ளியது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். அவர்கள் வாழும் வாழ்க்கையை பார்த்து மக்கள் பலரும் இப்படியெல்லாம் இல்லையே என வருத்தப்படும் அளவிற்கு சீரியல் நல்ல பெயரை எடுத்துள்ளது. இந்த சீரியல் வந்த பிறகு இதற்கு போட்டியாக சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஒரு சீரியல் ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் கணவரின் தம்பிகளுக்காக 15 வருடங்களாக குழந்தை பெற்றுக்கொள்ளாத தனம் கருத்தரிக்கிறார்.

Also Read :இந்தியில் ரீமேக்காகும் சன் டிவி ‘ரோஜா’ சீரியல் - ரசிகர்கள் குஷி

மேலும் இவருக்கு எப்போது சீமந்தம் வைப்பார்கள் என காத்திருந்த ரசிகர்களுக்கு சந்தோஷமான செய்தி கிடைத்துள்ளது. அது தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நிறைய பிரபலங்கள் கலந்துகொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. இத்தனை நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த தனம் சீமந்த நிகழ்ச்சி இன்றிலிருந்து ஒளிபரப்பாக இருப்பதாக தெரிகிறது. மேலும், வளைகாப்பு நிகழ்ச்சி ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த வார எபிசோடில், ஜீவாவின் மாமனார் ஜனார்தனனுக்கும் பக்கத்துக்கு கடைக்காரருக்கும் பார்க்கிங் தொடர்பாக பிரச்சனை முத்தியது. இதில் பக்கத்துக்கு கடைக்காரர் ஜனார்தனனை அடித்து கீழே தள்ளி விடுகிறார். இதனை கண்டு கோபமடைந்த ஜீவா தன் மாமனாருக்காக அங்கிருந்த பக்கத்து கடைக்காரர் மற்றும் ரவுடிகளை அடித்து விடுகிறார். மேலும், இந்த சம்பவம் அறிந்து வந்த மூர்த்தி மற்றும் கதிர் ஆகியோரும் ஜனார்தனனுக்கு ஆதரவாக சண்டையிடுகின்றனர்.

Also Read :விலையுயர்ந்த காரை பயன்படுத்திய மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா- வைரலாகும் புகைப்படம்

இதனை கண்ட ஜனார்த்தனன் மனம் நெகிழ்கிறார். மேலும், தனது மருமகன் ஜீவாவை கட்டித்தழுவுகிறார். இத்தனை நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மேல் கோபத்தை காட்டி வந்த ஜனார்த்தனன், அவர்களின் ஆதரவால் சற்று மனம் மாறியுள்ளார். மேலும் கடந்த எபிசோடில் தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சி குறித்தும் குடும்பத்தினர் விவாதித்து வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் இன்றிலிருந்து தனத்தின் சீமந்த நிகழ்ச்சிகள் ஆரம்பமாக போகிறது என்ற செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: