பல லட்சம் பார்வைகளை கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வீடியோ... அப்படி என்ன ஸ்பெஷல்?

காவ்யா அறிவுமணி

பழைய சோறு பச்சை மிளகாய் பாடலுக்கு ஆட்டம்போட்ட காவ்யா அறிவுமணியின் வீடியோ இன்ஸ்டாகிராமில் பல லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக் குடும்ப கதைக்களத்தை மையமாகக்கொண்டது. அண்ணன், தம்பிகள் நான்கு பேர் இணைந்து பாண்டியன் ஸ்டோர்ஸை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு இடையே இருக்கும் பாசத்தையும், எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டு விறுவிறுப்பாக சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. கடைக்குட்டி தம்பிக்கு மட்டும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

ஸ்டாலின், சுஜிதா, ஷீலா, ஹேமா ராஜ்குமார், குமரன், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமிழ் சீரியல்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸூக்கு இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் முண்ணனியில் இருந்து வருகிறது. நாடகத்தைப் போலவே இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களின் நிஜ வாழ்க்கையிலும் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முல்லையாக நடித்த வி.ஜே. சித்ரா, அந்த கதாப்பாத்திரத்தில் தனக்கென தனி முத்திரை பதித்திருந்தார். முல்லை கதாப்பாத்திரத்துக்காகவே தனி ரசிகர் பட்டாளமும் இருந்தது.

ஆனால், அவரின் தற்கொலைக்குப் பிறகு நாடகத்திலும் பல்வேறு அதிரடி திருப்பங்கள் நடந்தேறின. முல்லை கதாப்பாத்திரத்தில் அடுத்து நடிக்கப்போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பல்வேறு நடிகைகளின் பெயர்கள் இதில் இடம்பெற்றன. ஆனால், பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த காவ்யா அறிவுமணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. பாரதி கண்ணம்மா சீரியலில் நெகடிவ் இமேஜ் இருந்ததால், முல்லை கதாப்பாத்திரத்தில் அவரை ஏற்றுக்கொள்வதில் ரசிகர்களுக்கு முதலில் தயக்கம் இருந்தது.

Also Read : பாத்ரூம் டூர் வீடியோ விமர்சனங்கள்.. பதிலடி கொடுத்த பிக்பாஸ் அர்ச்சனா

தன்னுடைய சிறப்பான நடிப்பால் முல்லையாகவே மாறிவிட்டார் காவ்யா மாறன். இந்த இமேஜ் பாரதி கண்ணம்மா சீரியலிலும் அவருக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே, இன்ஸ்டாகிராமிலும், நியூ முல்லையான காவ்யா அறிவுமணி மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். நாள்தோறும் ஏதாவதொரு அப்டேட்டுகளையும், புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுமார் 7 லட்சத்துக்கும் மேலான பாலோயர்களை வைத்துள்ள அவர், தற்போது 'நயன்தாரா' அவதாரம் எடுத்துள்ளார். அதாவது, திருநாள் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நயன்தாரா கிராமத்து கிளியாக நடித்திருந்தார். அதில், பழைய சோறு பச்சை மிளகாய் பாடலில் தாவணி பாவாடையில் நடித்திருப்பார். அதனை காப்பி அடித்திருக்கும் காவ்யா அறிவுமணி, அந்தப் பாடலில் நயன்தாரவின் ஃபோர்ஷனை மிமிக் செய்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)


தாவணி பாவாடையில் காவ்யா அறிவுமணி கொடுத்திருக்கும் எக்ஸ்பிரஷன் மிகவும் கியூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர். இதேபோல், பல்வேறு பாடல்களுக்கும் காவ்யா அறிவுமணி நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.
Published by:Vijay R
First published: