முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / வின்னர் வடிவேலுவாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா - இன்ஸ்டாவில் வைரலாகும் கலகலப்பான ரீல்!

வின்னர் வடிவேலுவாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா - இன்ஸ்டாவில் வைரலாகும் கலகலப்பான ரீல்!

வின்னர் வடிவேலுவாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

வின்னர் வடிவேலுவாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

Viral video | சீரியலில் கஸ்தூரி கேரக்டரில் நடிப்பவர் நடிகை கம்பம் மீனா. இவர் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்கும் நடிகை சாய் காயத்ரி மற்றும் ஹேமா ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து காமெடி ரீல் ஒன்றை ஷேர் செய்து உள்ளார்.

  • Last Updated :

சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. எத்தனை எத்தனை ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் சோடை போகாத ஒரு இருக்கிறது என்றால் அது சீரியல்கள் தான்.

பொழுதுபோக்கை மையமாக கொண்ட முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் இடம்பெற்றுள்ளன சீரியல்கள். அந்த வகையில் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும் ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமின்றி பல சூப்பர் ஹிட் சீரியல்களை ஒளிபரப்புவதில் தனி இடம் பிடித்து உள்ளது ஸ்டார் விஜய் டிவி. இந்த சேனலில் காலை முதல் இரவு வரை நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அதிலும் குறிப்பாக மாலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் அதிக ரசிகர்களை பெற்று ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்து உள்ளன. விஜய் டிவி சீரியல்களில் ஃபேமிலி ஆடியன்ஸை மிகவும் கவர்ந்த சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு துவங்கி அரை மணி நேரம் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1 முதல் தற்போது வரை ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிநடை போட்டு வருகிறது.

Read More : சிவகாமி அம்மா நினைத்தது நடக்குமா? சந்தியா - சரவணனை பிரிக்க நினைக்கும் அர்ச்சனா!

கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் அபிமானம் பெற்ற சூப்பர் ஹிட் சீரியலாக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் நடிகர்கள் சோஷியல் மீடியாவில் நிறைய ஃபாலோயர்ஸை கொண்டுள்ளனர். முக்கியமாக தனம் கேரக்டரில் நடிக்கும் நடிகை சுஜிதா, மீனாவாக நடிக்கும் ஹேமா ராஜ்குமார் , கண்ணன் கேரக்டரில் நடிக்கும் சரவணன் விக்ரம் உள்ளிட்டோருக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் இருக்கும் போது காமெடியாக ரீல்ஸ் செய்து அதை ஷேர் செய்வார்கள். இதே சீரியலில் கஸ்தூரி கேரக்டரில் நடிப்பவர் நடிகை கம்பம் மீனா. இவர் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிக்கும் நடிகை சாய் காயத்ரி மற்றும் ஹேமா ராஜ்குமார் ஆகியோருடன் இணைந்து காமெடி ரீல் ஒன்றை ஷேர் செய்து உள்ளார்.




 




View this post on Instagram





 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)



வின்னர் படத்தில் வடிவேலு ஆற்றங்கரையில் உட்கார்ந்து பாத்திரம் கழுவும் சீனை வைத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் ரீல்ஸ் செய்து இருக்கிறார்கள் மூவரும். இந்த ரீல்ஸை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து உள்ளார் கம்பம் மீனா. இந்த ரீல்ஸில் தல, உன் கை பட்டவுடனே ஈய பாத்திரம் எல்லாம் வெள்ளி பாத்திரமா மின்னுது தல என்று ஹேமாவை பார்த்து சொல்கிறார் சாய் காயத்ரி. அதற்கு ஹேமா செருப்பு பிஞ்சிரும், சிங்கம் மாதிரி இருந்துகிட்டு எச்சி பாத்திரம் கழுவிட்டு இருக்கேன், குத்தலா.? என்று வடிவேலு டயலாக்கை பாத்திரம் தேய்த்து கொண்டே பேசுகிறார்.

top videos

    அப்போ மன்னிப்பு கேட்டு உழைச்சு சம்பாதிக்க வேண்டியது தானே என்று பிரஷாந்த் டயலாக்கை பேசுகிறார் கம்பம் மீனா. பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் இந்த ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

    First published:

    Tags: Entertainment, Trending Video, Vijay tv, Viral Video