முல்லையாக நடிக்கும் நடிகை யார்? - பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கொடுத்த தகவல்

முல்லையாக நடிக்கும் நடிகை யார்? - பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கொடுத்த தகவல்

நடிகை ஹேமாவுடன் சித்ரா

சித்ரா மறைவை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவலை நடிகை ஹேமா வெளியிட்டுள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக் குடும்ப வாழ்க்கை, அண்ணன் தம்பி பாசத்தைப் பேசும் இத்தொடருக்கு ரசிகர்கள் ஏராளம். அதில் முல்லை கேரக்டரில் நடித்திருந்த சித்ரா கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

இளம் வயதில் அவரது மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்கொலை குறித்து விசாரித்த போலீசார் அவரது கணவர் ஹேமந்த் தான் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இனி முல்லையாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. ஒரு சிலர் சித்ரா அத்தொடரில் முல்லையாகவே வாழ்ந்திருந்தார் என்பதால் இனி அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றனர். இதையடுத்து நடிகை சரண்யா முல்லையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை மறுத்தார் சரண்யா. அதேபோல் சீரியல் நடிகை ஜனனியும் தான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று கூறினார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடித்து வரும் ஹேமாராஜ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் பகுதியில் இனி முல்லையாக நடிக்கப்போவது இந்த நடிகையா என்று பதிவிட்டு அதனுடன் ஒரு யூடியூப் வீடியோவையும் இணைத்துள்ளார். அதில் பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை காவ்யா இனி முல்லையாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மீனாவே இப்படி பதிவிட்டிருப்பதால் இது உறுதியான தகவலாகத் தான் இருக்கும் என தெரிகிறது. வரக்கூடிய நாட்களில் உண்மை நிலை தெரிய வரும்
Published by:Sheik Hanifah
First published: