பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து குமரன் விலகலா?

நடிகர் குமரன்

கடந்த சில தினங்களாவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரம் இடம் பெறவில்லை.

 • Share this:
  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

  நான்கு அண்ணன் - தம்பிகளை மையப்படுத்திய இந்த சீரியலில் 3-வது ஜோடியான கதிர்-முல்லை ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர்களின் காதல் காட்சிகள் பலரது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக இடம் பிடித்தன. இந்நிலையில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  தளபதி 65-ல் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்?

  இனி முல்லை கதாபாத்திரம் நிறுத்தப்படுமோ என்று நினைக்கையில், அந்த ரோலில் காவ்யா அறிவுமணி நடிக்கத் தொடங்கினார். இதற்கிடையே கடந்த சில தினங்களாவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரம் இடம் பெறவில்லை. அவர் வெளியூரில் இருக்கிறார் என்பது போல கதை நகர்ந்தது.

  அதோடு குமரன் படத்தில் நடிக்கும் செய்தியும் வெளியானது. இதனால் அவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி விட்டாரோ என கலக்கத்தில் இருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்புக்கு திரும்பி விட்டதாக குமரன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இதனால் நிம்மதி பெருமூச்சு அடைந்திருக்கின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: