பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆண் நடிகர்களுக்கு மேக்கப் போடுவது இப்படிதான் - வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆண் நடிகர்களுக்கு மேக்கப் போடுவது இப்படிதான் - வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் ஆண் நடிகர்களுக்கு மேக்கப் போடுவதை அத்தொடரில் நடிக்கும் நடிகை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, சரவண விக்ரம், ஹேமாராஜ், குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தமிழில் ஹிட் அடித்த இத்தொடர் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இத்தொடரில் நடிக்கும் நடிகர்களுக்கென தனித்தனியே ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்கள் ஆர்மி மற்றும் ரசிகர் பக்கங்களை சமூகவலைதளத்தில் உருவாக்கி தங்களுக்கு பிடித்த கேரக்டர்களை கொண்டாடுகிறார்கள். அதேபோல் இத்தொடரில் நடிக்கும் சுஜிதா தனக்கென தனி யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் படப்பிடிப்பு நடக்கும் இடம், அந்த வீடு எப்படி ஷூட்டிங்கிற்கு குழுவினர் தயாராவார்கள் என்பதையெல்லாம் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமாவும் தனக்கென தனி யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஆண் நடிகர்களுக்கு எப்படி மேக்கப் போடப்படும், என்னென்ன பொருட்களை ஆண்களுக்கு பயன்படுத்துவார்கள் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் ஹேமா.

அதில் சரவண விக்ரமுக்கு கலை என்ற ஒப்பனை கலைஞரால் மேக்கப் செய்யப்படுகிறது. மேக்கப் மேன் கலை ஆரம்ப காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலரிடம் பணிபுரிந்திருப்பதாக தெரிவிக்கிறார்.10 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் மற்றும் மீனாவின் நகைச்சுவையான உரையாடலும் இடம்பெற்றுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: