Pandian Stores: திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

2015-ல் இது என்ன மாயம் என்ற திரைப்படத்திலும் குமரன் நடித்துள்ளார்.

  • Share this:
விஜய் டிவி-யில் ஃபேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கதிர் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமாக இருந்து வருபவர் நடிகர் குமரன் தங்கராஜன். இவர் துவக்க காலத்தில் விஜய் டிவி-யில் ஜோடி நம்பர் 1 என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பின்னணி நடனக் கலைஞராக பணியாற்றினார். அதை தொடர்ந்து 'உங்களில் யார் அடுத்த பிரவுதேவா' என்ற டான்ஸ் போட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். கடந்த 2009-ல் கலைஞர் டிவி-யில் ஒளிபரப்பான மானாட மயிலாட 4 ஷோவில் அப்சராவுடன் ஜோடியாக நடனம் ஆடிய இவர் அரையிறுதியோடு வெளியேறினார்.

அதை தொடர்ந்து மானாட மயிலாட சீசன் 5-ல் சுஹாசினியுடன் ஜோடியாக நடனம் ஆடினார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து இவர்களின் உறவு திருமணத்தில் முடிந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு சிறிய மகன் இருக்கிறான். தொடர்ந்து சின்னத்திரையில் மாப்பிள்ளை சீரியலில் ஜீவா என்ற கேரக்டரில் தோன்றி பிரபலமானார். பின்னர் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்துள்ளார். 2015-ல் இது என்ன மாயம் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த திரைபபடத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா செட்டி, நவ்தீப் போன்ற பலர் நடித்துள்ளார்கள். நடிகர் குமரன் தங்கராஜன் இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் குமரன் தங்கராஜன் - சுஹாசினி தம்பதி சமீபத்தில் தங்களது திருமண நாளை கொண்டாடி உள்ளனர். திருமண நாளை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினர். இது தொடர்பாக தனது மனைவியுடன் இருக்கும் சில ஃபோட்டோஷூட் ஃபோட்டோக்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார் நடிகர் குமரன்.




இந்த போஸ்ட்டில் "நமக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்" நேற்று !! என்று குறிப்பிட்டு தனது மனைவியான சுஹாசினியை டேக் செய்து, நீண்ட காலமாக என்னை கவனித்து பார்த்து கொண்டு வருவதற்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் என் வாழ்க்கையின் பல கட்டங்களிலும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகிறீர்கள். இது எளிதான விஷயமல்ல, ஆனால் நீ அதை தொடர்ந்து செய்து வருகிறாய்.

Also read... Roja: மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து ஃபோட்டோ ஷேர் செய்த ரோஜா சீரியல் ஹீரோயின்!

நீ எப்போதுமே எனக்கு ஒரு சிறந்த தோழியாக இருக்கிறாய். நான் எப்போதும் உன்னை எதற்கும் நம்பலாம். எனக்காக நீ இருப்பதற்கு நன்றி என்று கூறி உள்ளார். தனது ரசிகர்களுக்கு இதை பற்றி தெரிவிக்கையில், நேற்று எங்களது திருமண நாளை நாங்கள் மறக்கவில்லை, ஆனால் அதை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்ய மட்டுமே மறந்துவிட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன், உலகம் என்னவாக நான் இருக்க விரும்புகிறதோ அது போல நான் இருக்க மாட்டேன், நான் என்னவாக இருக்க நினைக்கிறேனோ அது போலவே நான் எப்போதும் இருப்பேன். இதை பற்றி இதுவரை புகார் ஏதும் தெரிவிக்காததற்கு நன்றி என்று கூறி உள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: