சித்ரா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி

சித்ரா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி

நடிகை சித்ரா

நடிகை சித்ரா கலந்து கொண்ட நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

  • Share this:
மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் சிதரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவர் ஏற்று நடித்திருந்த முல்லை கதாபாத்திரக்கு ரசிகர்கள் ஏராளம்.

எப்போதும் சிரித்த முகத்துடன் தோன்றும் சித்ரா, கடந்த டிசம்பர் 9-ம் தேதியன்று பூந்தமல்லி அருகே தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். சித்ரா உயிருடன் இல்லை என்பதை அறிந்த சின்னத்திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மேலும் படிக்க: ‘நடத்தையில் சந்தேகம்’.. ’இனி நடிக்கக்கூடாது’ என வாக்குவாதம் - சித்ரா தற்கொலை வழக்கில் ஹேம்நாத் குறித்து சிக்கிய ஆதாரங்கள் என்ன?

கடந்த அக்டோபர் மாதம் ஹேமந்த் எனபவரை பதிவுத் திருமணம் செய்து கொண்ட சித்ரா, இரவு படப்பிடிப்பு முடிந்து ஹேமந்துடன் தனியார் விடுதியில் தங்கியிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஹேமந்தை தொடர்ந்து 4 நாட்களாக விசாரித்த போலீசார் அவர் தான் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தும் நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: முல்லையாக நடிக்கும் நடிகை யார்? - பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா கொடுத்த தகவல்

சித்ரா தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக இரண்டு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதில், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்களுடன் அவர் கலந்து கொண்டுள்ளார். டிசம்பர் 20-ம் தேதி இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.அதில் மகிழ்ச்சியாக ஆடிப்பாடி கலகலப்பாக இருந்துள்ளார் சித்ரா. சித்ராவின் கடைசி தருணம் இது. சித்ரா உன் புன் சிரிப்புக்கு. உன் பாட்டுக்கு.. உன் ஆனந்த நடனத்துக்கு. சித்ரா எங்களை மகிழ்வித்தாய். விடை பெற்றாய். என்றும் உன் நினைவுகளில் ஸ்டார்ட் மியூசிக் என்ற குரலுடன் முடிவடைகிறது இந்த வீடியோ.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: