சீரியல் படப்பிடிப்பு & திரைப்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடக்கம் - விதிமுறையை மீறினால் நடவடிக்கை
இன்று முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளும் திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் மீண்டும் தொடங்கியுள்ளன.

கோப்பு படம்
- News18 Tamil
- Last Updated: July 8, 2020, 12:32 PM IST
மே மாதம் 30-ம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம் என்று அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து சில சீரியல்களின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கவே ஜூன் 19-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதேபோல் மே 11-ம் தேதி முதல் நடைபெற்று வந்த திரைப்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் ஜூலை 6-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளும், திரைப்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் மீண்டும் தொடங்கியுள்ளன. மூக்குத்தி அம்மன், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களின் இறுதிகட்ட பணிகள் நடைபெறவும் பெஃப்சி அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சின்னத்திரை படப்பிடிப்பில் அரசு விதித்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
இதற்காக 5 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், ஒவ்வொரு குழுவிலும் ஒரு இயக்குநர், ஒரு மேனேஜர், ஒரு கேமராமேன், பெஃப்சி நிர்வாகி என நான்கு பேர் இருப்பார்கள் என்றும், அவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்குச் சென்று கவனிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.படப்பிடிப்புக்கான நிபந்தனைகளை கடைபிடிக்காவிட்டால் யார் மீது தவறு உள்ளதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கவே ஜூன் 19-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதேபோல் மே 11-ம் தேதி முதல் நடைபெற்று வந்த திரைப்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் ஜூலை 6-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளும், திரைப்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் மீண்டும் தொடங்கியுள்ளன. மூக்குத்தி அம்மன், இந்தியன் 2 உள்ளிட்ட படங்களின் இறுதிகட்ட பணிகள் நடைபெறவும் பெஃப்சி அமைப்பு அனுமதி அளித்துள்ளது.