Home /News /entertainment /

மகாசங்கமம் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா செஞ்ச வேலைய பாத்தீங்களா.! வைரலாகும் வீடியோ

மகாசங்கமம் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா செஞ்ச வேலைய பாத்தீங்களா.! வைரலாகும் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா..வைரல் வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா..வைரல் வீடியோ

Viral Video | பாண்டியன் ஸ்டோர்ஸ் சூட்டிங் ஸ்பாட்டில் உணவு சமைத்தது பற்றி ஐஸ்வர்யா பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் டிவி சேனல்களில் ரசிகர்களை கவர்ந்த பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் ஸ்டார் விஜய் டிவி-யில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடி கொண்டிருக்கின்றன.

விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மௌனராகம் 2, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா, செல்லம்மா, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த சீரியல்களின் பட்டியலில் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்கள் முறையே இரவு 8 மணி மற்றும் 8.30 மணிக்கு அடுத்தடுத்து ஒளிபரப்பாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. ஒருபக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் - தம்பிகளின் பாசம் மற்றும் கூட்டு குடும்பத்தை கதைக்களமாக கொண்டிருக்கும் நேரத்தில், பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் போராட்டத்தை சொல்லும் கதைக்களமாக உள்ளது.

ஏற்கனவே கடந்த வருடம் 2 முறை, இந்த இரு சீரியல் கேரக்டர்களும் மெகாசங்கமத்தில் ஒன்றிணைக்கப்பட்டு உறவுமுறைப்படி சொந்தக்காரர்களாக காட்டப்பட்டனர். அப்போது ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி மெகா சங்கமத்தை சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்த்ததால் டிஆர்பி ரேட்டிங் எகிறியது. தற்போது இவ்விரு சீரியல்களின் மகாசங்கமம் துவங்கி இரவு 8 மணி முதல் 9 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது.



 




View this post on Instagram





 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)






இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை சேர்ந்த மீனா (நடிகை ஹேமா ராஜ்குமார்) மற்றும் ஐஸ்வர்யா (நடிகை சாய் காயத்ரி) ஆகியோர் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த அலப்பறை வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது கதைப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சென்னையில் உள்ள கோபி - பாக்கியா இல்லத்திற்கு வந்திருப்பது போல காட்டப்பட்டு வருகிறது.

சென்னையில் கடும் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸு, இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் செய்து மீனாவிற்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டு உள்ளார். இது தொடர்பான வைரல் வீடியோவில் பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை வெட்டி அடுப்பில் உள்ள பாத்திரத்தில் கொட்டுகிறார் ஐஸ்வர்யா.

தொடர்ந்து நூடுல்ஸை பாத்திரத்தில் கொட்டி மசாலாவை கலக்கி வேக வைக்கிறார். நூடுல்ஸ் செய்யும் போதே தான் எதற்கு இதை செய்கிறேன் என்ற காரணத்தையும் கூறி உள்ளார். நீண்ட நாள் கழித்து சென்னையில் அதுவும் கோடையில் சரியான மழை கொட்டுகிறது.

Read More : பிக் பாஸ் தாமரைச்செல்விக்காக புது வீடு கட்டும் பிரபல இசையமைப்பாளர்!


இந்த கிளைமேட்டிற்கு சூடாக நூடுல்ஸ் செய்து சாப்பிட்டால் செமையாக இருக்கும் என்று தோன்றியதால், தற்போது செய்து கொண்டிருப்பதாக கூறினார். மேலும் சங்கமம் ஷூட்டிங் என்பதால் நிறைய ஆர்டிஸ்ட்களுக்கான ஷாட்கள் எடுப்பதால் என்னை இப்போது ஃப்ரீயாக விட்டிருக்கிறார்கள் என்கிறார்.

நூடுல்ஸ் ரெடியான பிறகு வாயில் வைத்து சாப்பிட ஐஸ் தயாராகும் போது கரெக்ட்டாக மீனா வந்து விட, அவருக்கும் தான் தயார் செய்த நூடுல்ஸை கொடுக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து நூடுல்ஸை சாப்பிட்டு என்ஜாய் செய்யும் இந்த வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Entertainment, Trending, Vijay tv, Viral

அடுத்த செய்தி