சித்ராவுக்கு அரசியல்வாதிகள் உடன் தொடர்பு... ஹேம்நாத்தின் தந்தை பரபரப்பு புகார்

சித்ராவுக்கு அரசியல்வாதிகள் உடன் தொடர்பு... ஹேம்நாத்தின் தந்தை பரபரப்பு புகார்

நடிகை சித்ரா

சித்ரா தற்கொலை குறித்து சமூகவலைதளங்கள் வாயிலாக கிடைத்த தகவல்களைப் பெற்று ஹேம்நாத்தின் தந்தை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

  • Share this:
கடந்த டிசம்பர் 9-ம் தேதி அதிகாலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருடன் தங்கியிருந்த கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை செய்து அவர் தான் தற்கொலைக்குத் துாண்டியதாகக் கூறி கைது செய்தனர்.

யாரையோ காப்பாற்றுவதற்காக தனது மகனை அவசர கதியில் போலீசார் கைது செய்ததாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் குற்றம்சாட்டினார். வியாழக்கிழமை தனது மகனை சந்திக்கச் சென்ற ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், விசாரணையின் போக்கு திருப்தி அளிப்பதாக இல்லை என புகார் தெரிவித்தார். அதேநேரம், சித்ராவிற்கு கடன் பிரச்னை இருந்திருக்கலாம் என்றும் அதன் அடிப்படையில் கூட அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் புதிய தகவலை தெரிவித்தார்.

இந்நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் சமூக வலைதளங்களின் மூலமாக தனக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சித்ரா ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்து உள்ளார். இதில் நிச்சயதார்த்தம் வரை சென்று சித்ராவின் திருமணம் நின்றதும் தெரியவந்துள்ளது. சித்ரா மது பழக்கத்திற்கு உள்ளானவர். விஜய் டிவியின் தொகுப்பாளர் ரக்‌ஷன் என்பவர் நெருக்கமான புகைப்படங்கள் எடுத்து வைத்து சித்ராவை மிரட்டியிருப்பதும் சமூகவலைதள செய்திகள் மூலம் எனக்கு தெரிய வருகிறது.

ஒரு சில எண்களில் இருந்து அழைப்பு வந்தால் சித்ரா பதட்டத்துடன் தனியாக சென்று பேசுவார் என்றும் பின்பு அந்த எண்களை அழித்து விடுவார் எனவும் ஹேம்நாத் என்னிடம் தெரிவித்திருக்கிறார். முக்கிய அரசியல்வாதிகளுடன் தினமும் மணிக்கணக்கில் சித்ரா பேசியிருக்கிறார். சித்ரா திருமணம் செய்தால் பல ஆதாரங்களை வெளியிட்டு திருமணத்தை நிறுத்தவும் தயராக உள்ளதாக பல செய்திகள் வந்ததாக ரவிச்சந்திரன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

சித்ரா டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளார் என்பதால் அவருக்கு முதலீடு செய்த மற்றும் பழக்கம் உள்ள பெரிய நபர்கள் சினிமா நபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவருடன் தொடர்பில் இருந்துள்ளனர். சித்ராவுக்கு திருமணம் நடந்தால் அந்த பிரபலம் குறையத் தொடங்கிவிடும் என்பதால் ஒரு சில நபர்கள் மிரட்டல் விடுத்திருக்கலாம் என எனக்கு சந்தேகம் இருக்கிறது.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட ஹோட்டலில் சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. ஒரு பக்கமாக விசாரணை நடந்து வருகிறது. பெண் வீட்டு தரப்பிலும் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை செய்து உணமையை வெளிக்கொண்டு வந்து சரியான குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்து என் மகனை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: