தீவிரமடைகிறது நடிகை சித்ரா மரண வழக்கு.. தோழியும் நடிகையுமான சரண்யாவிடம் விசாரணை

தீவிரமடைகிறது நடிகை சித்ரா மரண வழக்கு.. தோழியும் நடிகையுமான சரண்யாவிடம் விசாரணை

நடிகை சித்ரா

சித்ராவுடன் நடித்த சக நடிகை சரண்யா மற்றும் அண்டை வீட்டார்களிடம் கோட்டாட்சியர் தனது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார்.

 • Share this:
  சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக சக நடிகையான சரண்யா மற்றும் அண்டை வீட்டில் வசிப்பவர்களிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

  சின்னத்திரை நடிகையான சித்ரா, சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத்தை போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை நடத்திவருகிறார். இதுவரை சித்ராவின் தாய், தந்தை, மாமனார், மாமியார் உள்ளிட்டோரிடம் விசாரணையை முடித்துள்ளார்.

  இந்நிலையில், சித்ராவுடன் நடித்த சக நடிகை சரண்யா மற்றும் அண்டை வீட்டார்களிடம் கோட்டாட்சியர் தனது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினார். முதலில் அண்டை வீடுகளில் வசிக்கும் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, நடிகை சரண்யா மற்றும் விடுதி உதவியாளர் ஆகியோரிடம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

  அப்போது, சித்ராவின் தற்கொலைக்கு பணியின்போது ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமா என விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: