மெகா சங்கமத்தில் இணையாத பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள்... என்னாச்சு..?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

டிஆர்பி ரேட்டிங் அதிகமுள்ள சில சீரியல்களின் ஷூட்டிங்குகள் அண்டை மாநிலமான ஐதராபாத் நகருக்கு மாற்றப்பட்டன.

 • Share this:
  ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் இரு ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றொன்று பாக்கியலட்சுமி. இந்த இரு சீரியல்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அண்ணன், தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை தெரியாத டிவி ரசிகர்கள் தமிழகத்தில் இருக்க முடியாது. ஏனென்றால் இதற்கு காரணம் இந்த சீரியலில் நடித்து வந்த விஜே சித்ராவின் மரணம். சித்ராவின் மரணத்திற்கு பிறகு இந்த சீரியலை பார்க்க துவங்கியவர்களின் எண்ணிக்கை அதிகம். முல்லை என்ற கேரக்டரில் நடித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு வந்தவர் விஜே சித்ரா.

  சரியாக படிக்காத இல்லத்தரசியையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் மையமாக கொண்டு நகரும் சீரியல் பாக்கியலட்சுமி. சில மாதங்களுக்கு முன் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்த கையோடு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இரு ஹிட் சீரியல்களும் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக விதிக்கப்பட்ட திடீர் லாக்டவுன் காரணமாக பல சீரியல்களின் படிப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டு அவற்றின் பழைய எபிசோட்களே ஒளிபரப்பப்பட்டன.

  Also Read : கண்ணான கண்ணே சீரியல் நடிகை நித்யா தாஸூக்கு இவ்ளோ பெரிய மகளா? வியக்கும் ரசிகர்கள்

  ஆனாலும் டிஆர்பி ரேட்டிங் அதிகமுள்ள சில சீரியல்களின் ஷூட்டிங்குகள் அண்டை மாநிலமான ஐதராபாத் நகருக்கு மாற்றப்பட்டன. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங் எகிறி காணப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களின் கேரக்டர்கள் இணைக்கப்பட்டு மெகாசங்கமம் ஷூட்டிங் நடத்தப்பட்டு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே ஒருமுறை 2 சீரியல் கேரக்டர்களும் மெகாசங்கமத்தில் ஒன்றிணைக்கப்பட்டு உறவுமுறைப்படி சொந்தக்காரர்களாக காட்டப்பட்டனர்.

  தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கேரக்டர்களான தனம், முல்லை, ஐஸ்வர்யா, கண்ணன், கஸ்தூரி உள்ளிட்டோர் மல்லியின் மதுரை வீட்டிற்கு வந்து தங்கியிருக்கின்றனர். ராதிகா வீட்டு கிரகபிரவேசத்தை தவிர்க்க ஐடியா போட்ட பாக்கியலட்சுமி சீரியலில் அவரது கணவர் கோபி, தன் தந்தையை தவிர அனைவரையும் அழைத்து கொண்டு மதுரையில் வந்து டேரா போடுகிறார். எதிர்பாராவிதமாக இரு குடும்பத்தினரும் மதுரையில் இருக்கும் காரணத்தால் பாக்கியலட்சுமி குடும்பத்தினர் மல்லி வீட்டிற்கு விசிட் அடித்து அங்கு சில நாட்கள் தங்குகின்றனர். ஐஸ்வர்யா மற்றும் பிரஷாந்த் இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவது போல காட்டப்பட்டு வருகிறது.   
  View this post on Instagram

   

  A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)


  எனினும் பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி சங்கமத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கேரக்டர்களான மூர்த்தி, ஜீவா, கதிர் மூவரும் இடம்பெறவில்லை. இந்நிலையில் ஐதராபாத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன், தனம், முல்லை மற்றும் கஸ்தூரியுடன் கதிர் வீடியோ காலில் பேசியுள்ளார். இது தொடர்பான போட்டோ இன்ஸ்டா உள்ளிட்ட சோஷிய மீடியாவில் வைரலாகி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: