ஹீரோயினுடன் ரொமான்டிக் பாடலுக்கு நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்

ஹீரோயினுடன் ரொமான்டிக் பாடலுக்கு நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்

நடிகர் ஜீவா, ஸ்மிருதி

நடிகை ஸ்மிருதி காஷ்யப் மற்றும் நடிகர் வெங்கட் ரங்கநாதன் இணைந்து விஜய் பட பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளனர்.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்ப வாழ்க்கை, அண்ணன் தம்பி பாசம் ஆகியவற்றை மையப்படுத்தி இத்தொடரின் கதை அமைக்கப்பட்டிருப்பதால் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மூர்த்தியின் முதல் தம்பி ஜீவா கேரக்டரில் நடித்திருப்பவர் வெங்கட் ரெங்கநாதன். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் தவிர சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ தொடரிலும் வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவருக்கு நடிகர் விஜய் வீட்டில் இருந்து அழைப்பு வந்திருந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விரும்பிப் பார்க்கும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா தான் அதற்கு காரணம் என்று கூறியிருந்த வெங்கட் விரைவில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரோஜா தொடரில் தனக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்மிருதி காஷ்யப் உடன் விஜய்யின் ‘கண்டாங்கி கண்டாங்கி’ பாடலுக்கு நடனமாடி அசத்தியிருக்கிறார் வெங்கட். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நடிகை ஸ்மிருதி, வெங்கட் விஜய்யின் தீவிர ரசிகர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ரோஜா தொடரில் அஸ்வின் பிரதாப் என்ற கேரக்டரில் நடிகர் வெங்கட்டும், பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்மிருதியும் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: