’எனக்கு விவாகரத்து ஆகி விட்டது’ சீரியல் நடிகர் ஷாக்

’எனக்கு விவாகரத்து ஆகி விட்டது’ சீரியல் நடிகர் ஷாக்

அஸீம்

நீதிமன்றத்தால் விவாகரத்து செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்!

 • Share this:
  பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு போன்ற பல வெற்றி சீரியல்களில் அவர் நடித்துள்ளார். பிக் பாஸ் 4-ல் வெகு நாட்கள் வீட்டுக்குள் இருந்த அவர், இறுதி வாரத்திற்கு முன்பாக வீட்டை விட்டு வெளியேறினார்.

  இதற்கிடையே, பிக் பாஸ் 4-ல் வைல்டு கார்டு போட்டியாளராக நுழையவிருந்த ஷிவானியின் பகல் நிலவு சீரியல் ஜோடி, நடிகர் அஸீம் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

  pagal nilavu ajeem gets divorced

  இது குறித்து இன்ஸ்டாகிராமில், "அனைவருக்கும் வணக்கம்! எங்கள் இரு தரப்பிலும் பரஸ்பர விருப்பத்தின் பேரில் நீதிமன்றத்தால் விவாகரத்து செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்! தயவுசெய்து எனது திருமண நிலை குறித்து எந்தவொரு தனிப்பட்ட கேள்விகளும் வேண்டாம்!" என பதிவிட்டு இருக்கிறார்.

  அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: