Netflix | Paava Kadhaigal | நெட்ஃப்ளிக்ஸில் வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனனின் ‘பாவக் கதைகள்’.. டீசர் ரிலீஸ்..

பாவக் கதைகள் போஸ்டர்

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள ‘பாவகதைகள்’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தின் டீசர் உடன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது

  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளத்துக்காக சில முன்னணி இயக்குநர்கள் ஆந்தாலஜி திரைப்படம் இயக்கி வருகின்றனர். சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ், கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன், சுஹாசினி இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கியிருந்தனர். இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

அடுத்ததாக மணிரத்னம் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கும் ‘நவராசா’ என்ற ஆந்தாலஜி படம் உருவாகி வருகிறது. கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் கதை இந்த ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் ’பாவக் கதைகள்' என்ற ஆந்தாலஜி படம் உருவாகியுள்ளது. இயக்குநர்கள் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ‘பாவ கதைகள்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கோச்சலின், பதம் குமார், பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரன் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.



இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தங்களது தளத்தின் மூலம் 190 நாடுகளில் பிரத்யேகமாக இந்தப் படைப்பை வெளியிடுகிறது.





உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Sheik Hanifah
First published: