ஸ்னோலின் மரணம்... ஆசிபா பாலியல் வன்கொடுமை... பா.ரஞ்சித் ஆல்பம் வெளியீடு!

மெல்லிய இசைப் பின்னனியில் கோபக் குரலோடு அந்தப் பாடலை அறிவு பாடுகிறார்.

மெல்லிய இசைப் பின்னனியில் கோபக் குரலோடு அந்தப் பாடலை அறிவு பாடுகிறார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  எப்போதும் சாதிக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் திரையின் மூலம் போரடி வரும் இயக்குநர் பா. ரஞ்சித், ட்விட்டரில் ஸ்னோலின் என்கிற பெயரில் புரட்சிகர ராப் ஆல்பம் வெளியிட்டுள்ளார்.

  நான்கு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைடிற்கு எதிராகப் போரடிய கல்லூரி மாணவி ஸ்னோலினை சுட்டுக் கொன்றது குறித்தும், சிறுமி ஆசிபாவை கோவில் கருவறையிலேயே பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தையும் பேசும் விதமாக அமைந்துள்ளது. முற்றிலும் மெல்லிய இசைப் பின்னனியில் கோபக் குரலோடு அந்தப் பாடலை அறிவு பாடுகிறார்.  இவர் இதற்கு முன் ஆண்டி இந்தியன் என்கிற பெயரில் ராப் பாடல் பாடி வெளியிட்டதில் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இதை பா.ரஞ்சித் காஸ்ட்லெஸ் கலெக்டிவ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  Published by:Sivaranjani E
  First published: