பா ரஞ்சித் படத்தில் ஹீரோவான யோகி பாபு!

பா ரஞ்சித் படத்தில் ஹீரோவான யோகி பாபு!

பா.ரஞ்சித் - யோகிபாபு

ஷான் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்தின் படபிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

 • Share this:
  யோகி பாபு நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கிறார் பா.ரஞ்சித்.

  இயக்குநர் பா.ரஞ்சித், படம் இயக்குவதோடு நல்ல படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார். ’பொம்மை நாயகி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  ஷான் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப் படத்தின் படபிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்ய, செல்வா எடிட்டராகவும், எல்.ஜெயரகு கலை இயக்குநராகவும் இந்தப் படத்தில் பணிபுரிகின்றனர்.

  'பொம்மை நாயகி' படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸுடன், சி வேலன் மற்றும் யாழி பிலிம்ஸ் டி லெமுவேல் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: