அதிக வரவேற்பைப் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் மற்றும் அதியன் ஆதிரையின் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்துக்கு பிறகு, தயாரிப்பாளராக களமிறங்கும் மூன்றாவது படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார் பா. ரஞ்சித்.
ரைட்டர் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில், லீட் ரோலில் நடிக்கிறார் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி. Little Red Car Films மற்றும் Golden Ration Films உடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார் பா.ரஞ்சித். இப்படத்தை எழுதி, இயக்க இருப்பவர் ஃப்ராங்க்ளின் ஜேக்கப்.
படத்தில் இணையும் மற்றவர்கள் குறித்த விவரம் இன்னும் வெளிவரவில்லையெனினும், ப்ரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார் எனவும், இசை கோவிந்த் வசந்தா, எடிட்டிங்கை மணி கையாள்கிறார் என தெரியவந்துள்ளது. கோவிந்த் வசந்தா இசையமைத்த 96 திரைப்படம், திரைக்கதையுடன், இசைக்காகவும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டதால், ரைட்டர் திரைப்படமும் இசை ரீதியாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Shooting commenced today for our first Co-Production with @GRfilmssg & @LRCF6204
Starring @thondankani as #Writer✍@Tisaditi @abhay_muvizz @PiiyushSingh @frankjacobbbb @doppratheep @govind_vasantha @editor_mani @officialneelam @kabilanchelliah @RIAZtheboss@pro_guna pic.twitter.com/sJjtQWdwQj
— pa.ranjith (@beemji) December 7, 2020
ஏ.எல் விஜய் இயக்கத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான கங்கனா நடிக்கும் ’தலைவி’ திரைப்படத்தில், சமுத்திரகனி அவரது பங்கு காட்சிகளை முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை பாரம்பரிய குத்துச்சண்டை போட்டியை 'சார்பட்டா பரம்பரை’ என்ற பெயரில் படமாக இயக்கியுள்ள ரஞ்சித், வடசென்னை மக்களின் தேவைகளையும் வாழ்க்கை முறையையும் தொடர்ந்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
’சார்பட்டா பரம்பரை’ என்னும் குத்துச்சண்டை கலாச்சாரத்தைக் குறித்த திரைப்படத்தில் ஆர்யா லீட் ரோலிலும், நடிகை துஷாரா, பசுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 96 Film, Athiyan aathirai, Director samuthrakani, Govind vasantha, Irandam ulagaporin kadaisi gundu, Pa. ranjith, Pariyerum perumal, Writer