சார்பட்டா பரம்பரை-க்கு பின் பா.ரஞ்சித்தின் புதிய படம் 'நட்சத்திரம் நகர்கிறது'... நாயகி யார் தெரியுமா?

பா.ரஞ்சித்

'நட்சத்திரம் நகர்கிறது' ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகும் 6வது படமாகும்.

  • Share this:
இயக்குனர் பா ரஞ்சித் அடுத்ததாக முழுநீள காதல் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமான ரஞ்சித் தொடர்ச்சியாக மெட்ராஸ், கபாலி, காலா என வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். தற்போது ஆர்யாவை நாயகனாக வைத்து அவர் இயக்கியிருக்கும் மாறுபட்ட திரைப்படமான  ‘சார்பட்டா பரம்பரை’ விரைவில் OTTயில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் அடுத்ததாக ரஞ்சித் ஒரு முழுநீள காதல் திரைப்படத்தை இயக்குகிறார். அட்டகத்திக்கு பின் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த திரைப்படங்களை மட்டுமே ரஞ்சித் இயக்கி வந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் இயக்கும் காதல் திரைப்படம் ரசிகர்களை மீண்டும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு  ‘நட்சத்திரம் நகர்கிறது’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

சார்பட்டா பரம்பரை


ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை ஆகிய படங்களில் நடித்த சஞ்சனா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். நாயகியை மையப்படுத்திய திரைப்படம் என்பதால் நாயகனை ஒப்பந்தம் செய்யாமலேயே படப்பிடிப்பு தொடங்குகிறது படக்குழு. இந்த மாதமே படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கின்றன.

Also Read:  கீர்த்தி சுரேஷ் முதல் அனுஷ்கா வரை: தென்னிந்திய டாப் 10 நடிகைகளின் உண்மையான வயது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'நட்சத்திரம் நகர்கிறது' ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகும் 6வது படமாகும். இயக்கம் தவிர்த்து படத்தயாரிப்பிலும் ரஞ்சித் ஈடுபட்டு வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெளியாகி இருக்கிறது. மேலும் இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளன.
Published by:Arun
First published: