Home » News » Entertainment » PA RANJITH ACTOR ARYA MOVIE TITLED SARPATTA PARAMBARAI ANA MSB

Sarpatta Parambarai | Pa Ranjith | 'எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்....' - இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் ரிலீஸ்..

பா.ரஞ்சித் - ஆர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படத்திற்கு 'சார்பட்டா' பரம்பரை என பெயரிடப்பட்டுள்ளது.

Sarpatta Parambarai | Pa Ranjith | 'எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்....' - இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் ரிலீஸ்..
சார்பட்டா பரம்பரை ஃபர்ஸ்ட் லுக்
  • Share this:
ரஜினிகாந்தின் ‘காலா’ பட வெற்றிக்குப் பின்னர் ஆர்யாவின் 30-வது படத்தை இயக்கினார் பா.ரஞ்சித். இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாராவும், கலையரசன், ஜான் கோக்கேன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜி.எப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திரா ராஜு இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்காக இயக்குநர் பா.ரஞ்சித் முறையாக குத்துச் சண்டை கற்று பின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். நடிகர் ஆர்யா இந்தப் படத்துக்காக தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றியுள்ளார். ஆர்யாவைப் போன்றே நடிகர் சந்தோஷ் பிரதாப்பும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை குத்துச் சண்டை வீரர் போல் மாற்றியிருந்தார்.

இந்நிலையில் இன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சார்பட்டா பரம்பரை என்ற டைட்டிலுடன் பாக்ஸிங் வளையத்துக்குள் கம்பீரமான வீரனாக நிற்கிறார் நடிகர் ஆர்யா.


ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், “இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஆர்யா இத்திரைப்படத்தின் கபிலா என்ற கேரக்டரில் நடித்திருப்பது தெரிய வருகிறது.

சார்பட்டா பரம்பரை:

வட சென்னையைச் சேர்ந்த பிரபலமான குத்துச்சண்டை வீரர்களைக் கொண்ட குழு சார்பட்டா. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதி கூட சார்பட்டா பரம்பரை விளையாடிய குத்துச்சண்டை போட்டிகளை ஆவலுடன் பார்த்து மகிழ்ந்தவர்கள். 1989 வரை கூட பப்ளிக் பாக்ஸிங் எனப்படும் இந்த போட்டிகள் நடைபெற்று வந்தன. பின்னர் வணிகரீதியான குத்துச்சண்டை பிரபலம் அடைந்த பின்பு பப்ளிக் பாக்ஸிங் எனப்படும் முறை அழிந்துவிட்டது. அந்த கதைக்கருவை மையமாக கொண்டு பீரியட் படமாக சார்பட்டா பரம்பரை உருவாகியுள்ளது.
First published: December 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading