PM Modi: பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு நடிகை ஓவியா எதிர்ப்பு

ஓவியா | பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு நடிகை ஓவியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

  • Share this:
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வரும் அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு செல்லும் பிரதமர் அங்கிருந்து காரில் விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு செல்கிறார். 11.15 மணி முதல் 12.15 மணி வரை அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ராணுவத்துக்காக தயாரிக்கப்பட்ட அர்ஜூன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். விரிவுபடுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கிறார். மேலும்

டெல்லியில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி. சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார் பிரதமர் மோடி.. அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு காரில் பிரதமர் மோடி செல்கிறார். அங்கு விரிவுபடுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையேயான 4-வது புதிய பாதை, விழுப்புரம் - கடலூர்- மயிலாடுதுறை - தஞ்சாவூர், மயிலாடுதுறை- திருவாரூர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சென்னை ஐஐடியின் தையூர் புதிய வளாகத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் படிக்க: பிரதமர் மோடி சென்னை வருகை : நாளை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

12.35 மணி முதல் 12.50 வரை முக்கிய பிரதமர் உடனான முக்கிய நபர்களின் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது சசிகலா வருகை, தமிழக அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரை ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.

மீண்டும் சாலை வழியாக ஐஎன்எஸ் அடையாறு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்றடையும் அவர் அங்கிருந்து பகல் 1.35 மணிக்கு கொச்சி செல்கிறார். கேரளாவில் அம்பலமேடு தனியார் பள்ளியில் 3.30 மணிமுதல் 4.30 மணி வரை நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அந்த கூட்டத்தில் கேரளாவில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி மேற்கொள்ளும் சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.



இந்நிலையில் பிரதமரின் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்திருக்கிறார். இந்திய பிரதமர் தென்னிந்தியா பக்கம் திரும்பும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: