ஊரடங்கில் ரசிகர்களின் மனம் கவர்ந்த OTT தளங்கள்... சிறிய பட்ஜெட் படங்களை வெளியிடத் திட்டம்!

மாதிரிப்படம்

சிறு பட்ஜெட் படங்களை வாங்க OTT நிறுவனங்களும் நேரடியாக OTT-யில் படங்களை வெளியிட தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • Share this:
    ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை பெரியளவில் உயர்ந்திருப்பதால் பல சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் மே 3-க்கு பிறகு ஊரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பதும் ஒருவேளை திறந்தாலும் முன்பு போல மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு வருமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    அப்படியே படம் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டினாலும் விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம் என டஜன் கணக்கில் பெரிய படங்கள் வர காத்திருப்பதால் இனிவரும் காலம் சிறு பட்ஜெட் படங்களுக்கு கடும் நெருக்கடியாகவே இருக்கும்.

    ஊரடங்கால் தற்போது அனைவரும் வீட்டில் முடங்கி கிடப்பதால் இணையம் வழியாக அதிகாரப்பூர்வமாக செயல்படும் மேலதிக ஊடக சேவைகளான OTT தளங்களின் பயன்பாட்டு முன்னெப்போதும் இல்லாத அளவு 56 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. உதாரணமாக, ஊரடங்கு உத்தரவால் நன்றாக

    ஓடிக்கொண்டிருக்கும் போதே திரையரங்கில் இருந்து நீக்கப்பட்ட 'தாராள பிரபு' திரைப்படம் தற்போது OTT ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.

    இதை மனதில்கொண்டு ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ள சிறு பட்ஜெட் படங்களை வாங்க OTT நிறுவனங்களும் நேரடியாக OTT-யில் படங்களை வெளியிட தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    எது எப்படி இருந்தாலும் கூத்துக்கலை, நாடகம், திரைப்படங்கள் என ஒவ்வொரு காலக்கட்டத்துக்கும் மாறிவந்த கதை சொல்லும் முறை தற்போது அடுத்தக்கட்டமாக OTT எனும் நவீன வடிவத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published: