• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 'OTT பிளாட்ஃபார்ம்கள் பலரது வாழ்க்கையை காப்பாற்றும்’ .. நடிகை வித்யா பாலன் கருத்து..

'OTT பிளாட்ஃபார்ம்கள் பலரது வாழ்க்கையை காப்பாற்றும்’ .. நடிகை வித்யா பாலன் கருத்து..

நடிகை வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன்

தியேட்டர்களுக்கு சென்றால் ஒரு நபருக்கு 1,000 ரூபாய் செலவாகும் நிலையில் மாதம் 200 ரூபாயில் OTT தளத்தில் பெரும்பாலானோர் தங்களுக்குத் தேவையான படங்களை குடும்பத்துடன் பார்த்துவிடுகிறார்கள்.

  • Share this:
தென்னிந்தியாவில் பிறந்து, இந்தி சினிமாவில் தனது நடிப்பு திறமையால் முன்னணி நாயகியாக வலம்வருகிறவர் வித்யா பாலன் . இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாஸான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 2005-ஆம் ஆண்டு வெளியான ‘பரினீதா’ படத்தின் மூலம் அறிமுகமான வித்யா பாலன், ‘ஃபா’, ‘கஹானி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவரது நடிப்பில் வெளியான குரு, டர்ட்டி பிக்சர்ஸ் போன்றவை தமிழிலும் நல்ல பிரபலம் அடைந்தது.

கொரோனாவால் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான புதிய படங்கள் OTT தளங்களில் வெளியாகி வருகின்றன. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதியின் க./பெ. ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின், சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத் உள்ளிட்ட பல படங்கள் OTTயில் வெளியிடப்பட்டன. இந்தியில் 10-க்கும் மேற்பட்ட படங்கள் OTTயில் வெளிவந்துள்ளன.

நடிகை வித்யா பாலன்


மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்துள்ள திரிஷ்யம் 2 படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. படங்களை OTTயில் வெளியிடுவதை ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் வரவேற்று உள்ளார். வித்யாபாலன் இதுகுறித்து கூறும்போது, “ஓ.டி.டி. தளங்கள் மீது எனக்கு ஈடுபாடு உண்டு. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை OTT தளங்கள் காப்பாற்றும். புதிய படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைக்காதவர்களுக்கு ஓ.டி.டி. தளங்கள் கைகொடுக்கும். நான் OTT தொடர்களில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். உரிய நேரத்தில் அதை செய்வேன்'' என்றார்.

கொரோனா காலகட்டத்தை நாம் மாற்றத்துக்கான காலகட்டம் என்று கூறலாம். மருத்துவம், கல்வி, வர்த்தகம் என அனைத்தும் அதன் முந்தைய தன்மையிலிருந்து மாற்றமடைந்து புதிய பரிமாணத்துக்குள் நுழைந்திருக்கின்றன. இதில் பொழுதுபோக்குத் துறையும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் OTT 2008-ம் ஆண்டே அறிமுகமாகி இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளிலேயே பரவலாக சென்றடைந்திருக்கிறது. 2012-ல் வெறும் இரண்டு OTT தளங்கள்தான் இருந்தன. தற்போது 40க்கும் மேற்பட்ட தளங்கள் உள்ளன. தற்சமயம் இந்தியாவில் OTT தளங்களின் சந்தை மதிப்பு ரூ.3,500 கோடியாக இருக்கிறது.

மேலும் இது ஆண்டுக்கு 22 சதவீதம் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் ஹாட்ஸ்டார், ஜீ5, அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் என OTT தளங்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. தியேட்டர்களுக்கு சென்றால் ஒரு நபருக்கு 1,000 ரூபாய் செலவாகும் நிலையில் மாதம் 200 ரூபாயில் OTT தளத்தில் பெரும்பாலானோர் தங்களுக்குத் தேவையான படங்களை குடும்பத்துடன் பார்த்துவிடுகிறார்கள். இதுபோன்ற பல வசதிகள் இந்த OTT யில் இருப்பதால் தான் வித்யா உட்பட பல பிரபலங்கள் OTT-க்கு ஆதரவாக பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: