முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அடுத்தடுத்த OTT ரிலீஸ்... லாபமடைந்தது யார்...?

அடுத்தடுத்த OTT ரிலீஸ்... லாபமடைந்தது யார்...?

அமேசான் பிரைமில் வெளியான படங்கள்

அமேசான் பிரைமில் வெளியான படங்கள்

கொரோனா ஊரடங்கால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த நடைமுறையில் யார் லாபம் பார்த்துள்ளார்கள் என அலசுகிறது இந்த தொகுப்பு

 • 1-MIN READ
 • Last Updated :

  நாடக மேடையிலிருந்து பல்வேறு பரிமாணங்களை எடுத்துள்ள சினிமா இன்று செல்போன்களில் வெளியாகும் ஓடிடி என்ற நிலையை அடைந்துள்ளது. அண்மையில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்த பெண்குயின் ஆகிய படங்கள் நேரடியாக அமேசான் பிரைமில் வெளிவந்தன. ஆனால் இந்த இரண்டு படங்களும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை என்றே திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  பொன்மகள் வந்தாள் படத்தால் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு இரண்டு முதல் மூன்று கோடி வரை லாபம் கிடைத்ததாகவும் பெண்குயின் படத்தால் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு கோடின்வரை லாபம் கிடைத்ததாகவும் சொல்லப்பட்டாலும் அமேசானை பொறுத்தவரை இந்த படங்களால் லாபம் எதுவும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

  இந்த படங்கள் மீதான எதிர்பார்ப்பால் அமேசான் பிரைம் தளத்திற்கு லட்சக்கணக்கான புதிய சந்தாதாரர்கள் இணைந்தாலும் அதனால் அமேசான் நிறுவனம் பெரிய லாபம் பார்க்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

  தமிழ் மட்டுமல்லாமல் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகியிருந்த குலாபோ சித்தாபோ படமும் மலையாளத்தில் அதிதி ராவ் ஹைதரி நடிப்பில் உருவாகியிருந்த சுஃபியும் சுஜாதாயும் படமும் அந்நிறுவனத்துக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.


  படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

  படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்


  ஊரடங்கை பயன்படுத்தி மிகுந்த ஆரவாரத்துடன் களமிறங்கிய அமேசான் பிரைம் நிறுவனம் இப்படி அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போனதுடன் புது படங்களை வாங்கி வெளியிடுவதையும் தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது..

  அமேசான் பிரைமின் நிலைமையோ இப்படியிருக்க மற்றொரு முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்த விவகாரத்தில் கவனமாக காய் நகர்த்தி வருகிறது. இந்தியில் Choked மலையாளத்தில் கப்பெல்லா என விமர்சன ரீதியாக பாராட்டுக்களை குவித்து வரும் படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் நெட்பிளிக்ஸ் தமிழில் அட்லி தயாரிப்பில் உருவாகிவரும் அந்தகாரம் படத்தை வாங்கியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

  தமிழ் ஓடிடி தளத்தில் முதல்முதலில் நேரடியாக படங்களை வெளியிட்டு ஆச்சரியப்படுத்திய ஜீ 5 நிறுவனம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் தீவிரமாக களம் காண தயாராகி வருகிறது. வரலட்சுமி சரத்குமாரின் டேனி, யோகி பாபுவின் காக்டெயில் ஆகிய படங்களை தங்களுடைய தளத்தில் வெளியிட போவதாக அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்து மிகப்பெரிய அளவில் விளம்பரமும் செய்து வருகிறது.

  அந்தவகையில் ஓடிடி-யின் வரவால் லாபம் அடைந்தது இரண்டாம் நிலையில் இருக்கும் படங்கள் மட்டுமே. சிறு பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் ஆதரவளிப்பதில்லை. ஆனால் பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டினாலும் பெரிய ஹீரோக்கள் இதற்கு செவி சாய்ப்பதில்லை.

  First published:

  Tags: OTT Release