Home /News /entertainment /

நவம்பர் 20-ம் தேதி கோவாவில் சர்வதேச திரைப்பட விழா - ‘ஒத்த செருப்பு’ தேர்வு

நவம்பர் 20-ம் தேதி கோவாவில் சர்வதேச திரைப்பட விழா - ‘ஒத்த செருப்பு’ தேர்வு

ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன்

ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    50-வது சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபனின் ஒத்த செருப்பு திரையிடப்பட உள்ளது.

    50-வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் இந்திய மொழிகளில் 26 திரைப்படங்கள் திரையிடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும் தாதா சாஹேப் விருது பெற இருக்கும் அமிதாப்பச்சனை கவுரவிக்கும் விதமாக அவரது படங்களும் திரையிடப்படவுள்ளன. மேலும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கல்லி பாய் படமும் இத்திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.



    வீடியோ பார்க்க: தமிழ் சினிமாவில் சாதி அரசியல்... அசுரன் படம் பற்றி வெற்றிமாறன் பேட்டி

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actor Parthiban

    அடுத்த செய்தி