Home /News /entertainment /

"ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்" - கமல்ஹாசன்

"ஒரு செருப்பு வந்து விட்டது; இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்" - கமல்ஹாசன்

ஒத்த செருப்பு படவிழாவில் கமல்ஹாசன்

ஒத்த செருப்பு படவிழாவில் கமல்ஹாசன்

பார்த்திபன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.

இந்தவிழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், “காந்தி ரயிலில் சென்று கொண்டு இருந்த போது அவரது ஒரு செருப்பு கீழே விழுந்துவிட்டது. அதை ஒரு பெண் எடுத்துச் சென்றார். அந்த சமயம் காந்தி மற்றொரு செருப்பையும் கழற்றிவிட்டார். ஒரு செருப்பு யாருக்கும் பயன்படாது. அதனால் தான் இன்னொரு செருப்பையும் கழற்றிவிட்டேன் என்றார். நான் காந்தி ரசிகன்.



நான் சென்ற இடத்தில் என் மீது ஒரு செருப்பு வீசினர். இன்னொரு செருப்பும் என்னை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கிறேன். தற்போது ஒரு செருப்பு கிடைத்துவிட்டது. மற்றொரு செருப்பு விரைவில் கிடைக்கும். அதற்கான தகுதி எனக்கு உண்டு. செருப்பை போட்டவருக்கு தான் அவமானம்.

முதலில் புதிய பாதை படத்தில் நடிக்க வேண்டியது நான். ஆனால் தேதி கிடைக்காததால் பார்த்திபனே இயக்கி நடிக்க வேண்டியதாகிவிட்டது. கே.பாக்யராஜ் 16 வயதினிலே படத்தில் நாட்டு வைத்தியர் வேடத்தில் நடித்திருப்பார். தற்பொழுது தமிழ் சினிமாவிற்கே நாட்டு வைத்தியராக இருக்கிறார். தலைசிறந்த இயக்குநர்கள், நடிகர்கள் பட்டியலில் பார்த்திபனும் இணைந்துள்ளார். வாழ்த்துக்கள் தொடர்ந்து கிடைத்தால் வெற்றி என்பது தொடரும்.

எஸ். பி. முத்துராமன் வாரிசாக பார்த்திபன் உள்ளார். ஒத்த செருப்பு பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. நட்சத்திர தொல்லை காரணமாக தான் நானே தயாரிப்பாளராக ஆனேன்” என்று கூறினார்.

விழாவில் பங்கேற்ற கமல்ஹாசனுக்கு நடிகர் பார்த்திபன் செங்கோல் ஒன்றை பரிசளித்தார்.

வீடியோ பார்க்க: நான் பேசுவது புரியவில்லை என்றால், என்னுடைய ஹேராம் படத்தை பாருங்கள் - கமல்

Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Parthiban, Kamal hassan

அடுத்த செய்தி