ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஆஸ்கர் வெல்லுமா இந்திய படைப்புகள்.. காத்திருக்கும் 4 படங்கள்.. இன்று மாலை வெளியாகும் பட்டியல்!

ஆஸ்கர் வெல்லுமா இந்திய படைப்புகள்.. காத்திருக்கும் 4 படங்கள்.. இன்று மாலை வெளியாகும் பட்டியல்!

ஆஸ்கர்

ஆஸ்கர்

Oscars 2023: 95 ஆவது ஆஸ்கர் விருதுக்கான இறுதி பரிந்துரைப்பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடப்பாண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி பரிந்துரைப்பட்டியலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 4 இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகும் படங்களில் பட்டியல் இன்று மாலை 7 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த இசை பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ளது.

ஆர்.ஆர். ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருது பெற்றது. இதனால், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், இந்திய அரசு சார்பில் குஜராத்தி படமான செல்லோ ஷோ சிறந்த திரைப்படத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பான் நலின் இயக்கியுள்ள இப்படம், இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற 14 நாடுகளை சேர்ந்த வெவ்வேறு மொழி படங்களுடன் போட்டியிடுகிறது. இதே போன்று சிறந்த ஆவணப்படத்திற்கான போட்டியில், சவுனாக் சென்ஸ் இயக்கிய ஆல் தட் ப்ரீத்ஸ் என்ற படம் இடம்பெற்றுள்ளது. இப்படம் கடந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் குளோப் விருது பெற்றது.

இதே போன்று நெட்பிளக்ஸில் வெளியான ஆவணப்படமான தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் ஆஸ்கர் பரிந்துரையின் இறுதி சுற்றில் இடம்பெற்றுள்ளது . எனவே ஆஸ்கர் விருதின் இறுதி பரிந்துரைப்பட்டியலில் இடம் பெற போகும் இந்திய திரைப்படம் எது என்பதை அறிய, சினிமா ஆர்வலர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


First published:

Tags: Oscar Awards