95-வது ஆஸ்கார் விருது விழா இன்று அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பிரதேசங்களில் நேரடி ஒளிப்பரப்பாகி வருகிறது. ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், இந்திய நடிகை தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது நேரடி ஹாலிவுட் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் சிறந்த பிறமொழி திரைப்படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளை சேர்ந்த படங்களுக்கும் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தியா சார்பில் நிறைய படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும் அமீர்கான் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான லகான் திரைப்படம் மட்டுமே ஆஸ்கரின் இறுதி சுற்றை எட்ட முடிந்தது. ஆனாலும் ஒரு நேரடி இந்திய திரைப்படம் ஆஸ்கர் மேடையில் இதுவரை விருது வென்றதில்லை.
Here's the energetic performance of "Naatu Naatu" from #RRR at the #Oscars. https://t.co/ndiKiHeOT5 pic.twitter.com/Lf2nP826c4
— Variety (@Variety) March 13, 2023
இந்த நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில், கீரவாணி இசையமைப்பில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் போட்டியில் இறுதிச்சுற்று நாமினேஷனில் இடம்பிடித்து விருதையும் வென்றது. ஏற்கனவே ஆஸ்கர் விருதுக்கு அடுத்து உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதினை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இன்றைய ஆஸ்கர் விழாவிலேயே நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் மேடையில் ஒலிபரப்பப்பட்டு நடனக்குழுவினர் நடனம் ஆடினர். அந்த டான்சுக்கு ஆஸ்கர் விழா விருந்தினர்கள் எழுந்து நின்று பாராட்டுகளை தெரிவித்தனர். நாட்டு நாட்டு நடன அறிவிப்பை இந்திய நடிகை தீபிகா படுகோன் ஆஸ்கர் மேடையில் அறிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oscar Awards