• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ராணுவ வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சூர்யா!

ராணுவ வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சூர்யா!

நடிகர் சூர்யா| இயக்குநர் சுதா கோங்கரா

நடிகர் சூர்யா| இயக்குநர் சுதா கோங்கரா

குனித் மோங்கா தயாரிப்பில் உருவான 'Period: End of Sentence' ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதையில் சூர்யா நடிக்கிறார்.

    செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சூர்யா. இதில் என்.ஜி.கே கோடைவிடுமுறைக்கு வெளியாகும் என தெரிகிறது.

    இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க சூர்யா தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தோடு இணைந்து குனித் மோங்காவும் தயாரிக்கிறார்.

    இதை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தது.



    குனித் மோங்காவிடம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்திய புத்தகத்தின் உரிமை உள்ளது.

    ஜி.ஆர்.கோபிநாத் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்து 1971 போரிலும் பங்கேற்றுள்ளார். இவர் தன்னுடன் பணியாற்றிய சக அதிகாரியின் துணையோடு ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவினார். இவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படத்தில் தான் சூர்யா நடிக்கிறார்.

    குனித் மோங்கா தயாரிப்பில் உருவான 'Period: End of Sentence' ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    மார்கெட் சரிவின் போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நாயகிகள் - வீடியோ

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: