• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Oscars 2019: விருதுகளை அள்ளிய ப்ளாக் பேந்தர்

Oscars 2019: விருதுகளை அள்ளிய ப்ளாக் பேந்தர்

ப்ளாக் பேந்தர்ஸ்

ப்ளாக் பேந்தர்ஸ்

Oscars 2019 பல ஆண்டுகளுக்குப் பின்னர் விழா நிகழ்ச்சி தொகுப்பாளர் இல்லாமல் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து வரும் ஆஸ்கர் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேர் கண்டு களித்து வருகிறனர்.

    சினிமாத்துறையின் மிக உயரிய கவுரவமாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது.

    பல ஆண்டுகளுக்குப் பின்னர் விழா நிகழ்ச்சி தொகுப்பாளர் இல்லாமல் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டாக் படத்தில் நடித்த ரெஜினா கிங், சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த ஆவணப்படமாக ப்ரீ சோலோ படமும், வைஸ் படத்திற்கு சிறந்த ஒப்பனைக்கான விருதும் வழங்கப்பட்டது. சிறந்த ஆடை வடிவமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு என பிளாக் பேந்தர் படத்திற்கு தொடக்கத்திலேயே 2 விருதுகள் கிடைத்துள்ளது.

    பின்னர், பின்னணி இசைக்கான விருதையும் அப்படம் பெற்றது.

    விழாவில் ஏ.ஆர் ரஹ்மான்


    சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை ரோமா படத்திற்காக அல்போன்சோ குவாரோன் பெற்றார். சிறந்த ஒலி படத்தொகுப்புக்கான ஆஸ்கார் விருது போகிமியன் ராப்சோடி படத்திற்கு கிடைத்தது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை ரோமா பெற்றது.

    சிறந்த தொகுப்பாளர் விருதை போஹேமியான் ராப்சோடி 3-வது முறையாக பெற்றுள்ளார். தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: