கலைஞர் பரியனை பார்த்திருந்தால் வெகுவாக பாராட்டியிருப்பார்- மு.க.ஸ்டாலின்

படக்குழுவினருடன் ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா

 • News18
 • Last Updated :
 • Share this:
  தலைவர் கலைஞர் பரியனை பார்த்திருந்தால் வெகுவாக பாராட்டியிருப்பார் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் பரியேறும் பெருமாள். நடிகர் கதிர் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

  கடந்த மாதம் 28-ம் தேதி வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைத்துறை பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் இந்தப் படத்தை பார்த்துவிட்டு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில் நேற்று எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தப் படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் பா.ரஞ்சித்-ஐ பாராட்டினார். அப்போது பேசிய அவர், ``தலைவர் கலைஞர் பரியனை பார்த்திருந்தால் வெகுவாக பாராட்டியிருப்பார்.  பல வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த சிறந்த படம் பரியேறும் பெருமாள்’’. திரைப்படக் குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறினார்.

  படக்குழுவினருடன் ஸ்டாலின் மற்றும் ஆ.ராசா


  நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், ``இரட்டை குவளையால் ஊர் என்றும் சேரி என்றும் பிரித்த நிலத்தில், அதே இரட்டை குவளையால் ஊரையும் சேரியையும் இணைத்து விட்டான் ``பரியேறும் பெருமாள் ". வாழ்த்துகள்.’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

  Published by:Vinothini Aandisamy
  First published: