Vairamuthu : 'புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்' - கவிஞர் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், இவ்விருது வைரமுத்துவின் தமிழாற்றல் எல்லைகளை விரிவுபடுத்தி உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கான பாதையை வகுத்திருப்பதாக பாராட்டியுள்ளார்.

  • Share this:
    கவிஞர் வைரமுத்துவுக்கு, மலையாளப் பல்கலைக்கழகம் வழங்கும் கவுரவமிக்க ஓஎன்வி விருது, வழங்கப்பட்டுள்ளது.

    மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் இவ்விருது முதல் முறையாக கேரளாவை சாராத வேறு மொழி கவிஞருக்கு அளிக்கப்படுகிறது. இவ்விருதைப் பெறுவதில் மிகப் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அணைகடந்த வெள்ளம்போல்
    'என் காதலா' என்ற
    என் ஆறாம் பாட்டுக்கு
    நீங்கள் வழங்கிவரும் வரவேற்பால்
    என் மனசுக்குள் மயிலிறகு ஊர்கிறது.

    நீங்கள்
    ஒருமுறை இட்ட பதிவை
    இருமுறை வாசிக்கிறேன்.

    மேகமில்லாமல்
    ஏது மழை?
    நீங்களில்லாமல்
    ஏது கலை?

    நன்றி. என கூறியுள்ளார்

     



     

     



     

    இதனிடையே  கவிஞர் வைரமுத்துவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவது போல கேரளத்தின் புகழ்மிகு ஓஎன்வி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார், இவ்விருது வைரமுத்துவின் தமிழாற்றல் எல்லைகளை விரிவுபடுத்தி உலகளாவிய விருதுகளை நோக்கிய அவரது பயணத்திற்கான பாதையை வகுத்திருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: