இந்தியில் ரீமேக்காகும் ’ஓ மை கடவுளே!’

இந்தியில் ரீமேக்காகும் ’ஓ மை கடவுளே!’

ஓ மை கடவுளே

இந்திக்கு செல்லும் இந்தப் படத்தை தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவே இயக்குகிறார்.

 • Share this:
  தமிழில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஓ மை கடவுளே’. இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது.

  தமிழில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இரண்டு குழந்தைப் பருவ நண்பர்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் இயக்கப்பட்டிருந்தது. பெஸ்ட் ஃப்ரெண்டை திருமணம் செய்துக் கொண்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதற்கு மத்தியில், திருமணம் செய்துக் கொண்ட இவர்களின் வாழ்க்கை தவறான புரிதல்களால் விவாகரத்து வரைக்கும் செல்கிறது.

  சித்தி 2 நிறுத்தப்படுகிறதா? சீரியல் நடிகை பதில்

  இந்திக்கு செல்லும் இந்தப் படத்தை தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவே இயக்குகிறார். “102 நாட் அவுட்” இயக்குனர் உமேஷ் சுக்லா இதனை எழுதுகிறார். சுக்லா, எண்டமால் ஷைன் இந்தியா மற்றும் மும்பை டாக்கீஸ் ஆகியவை இந்தப் படத்தின் உரிமைகளைப் பெற்றுள்ளன.

  இதன் மூலம் இந்தியில் அறிமுகமாகவுள்ள இயக்குநர் அஸ்வத், தற்போது ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு பதிப்பை இயக்குகிறார். திரைப்படத் துறையில் தனக்கு முதல் படியாக இருந்ததால், இந்த படம் தனது இதயத்திற்கு நெருக்கமானது அவர் குறிப்பிட்டார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: