அஜித்துக்கு வாழ்த்து சொன்ன நாடாளுமன்ற உறுப்பினர்!

அஜித்

கொரோனா காலத்தில் சமூக வலைதளங்களில் கூட கொண்டாட்டம் வேண்டாம் என்று அஜித் கேட்டுக்கொண்டதால் வலிமை படம் குறித்த எந்த அப்டேட்டும் இன்று வெளியாகவில்லை.

  • Share this:
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வாழ்த்து மழை பொழிய திரைத்துறை பிரபலங்களும் ‘தல’ அஜித்க்கு வாழ்த்துச் சொல்லத் தவறவில்லை.

    இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு துணைமுதல்வரின் மகனும், தேனி தொகுதியின் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “இன்று பிறந்தநாள் காணும் நண்பர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்கள், நீண்ட ஆயுளோடு பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கொரோனா காலத்தில் சமூக வலைதளங்களில் கூட கொண்டாட்டம் வேண்டாம் என்று அஜித் கேட்டுக்கொண்டதால் வலிமை படம் குறித்த எந்த அப்டேட்டும் இன்று வெளியாகவில்லை.

    இதுகுறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் விடுத்திருந்த அறிக்கையில், "கோவிட் 19 என்னும் கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்துக்கும் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    Also see:
    Published by:Sheik Hanifah
    First published: