'அது ஒரு கனாக்காலம்'... - செவிலியர் தினத்துக்கு கல்லூரி புகைப்படங்களை பகிர்ந்த நடிகை

நடிகை வித்யா சந்திரன்

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் சேவையாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் தன்னுடைய செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகை வித்யா சந்திரன்.

  • Share this:
நடிகை வித்யா சந்திரன் செவிலியராக இருந்து நடிப்பு துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர். மே 12ம் தேதி உலகம் முழுவதும் செவிலியர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தன்னுடைய கல்லூரி கால புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், தோழிகள், ஆசிரியர்கள் மற்றும் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் சேவையாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் தன்னுடைய செவிலியர் தின வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

செவிலியராக மகத்தான சேவையாற்றிய ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale)-ஐ கவரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாளான மே 12ம் தேதி, உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நடிகை வித்தியா சரணும் கடந்த 2019 ஆம் ஆண்டு நர்சிங் படிப்பை முடித்து சில காலம் செவிலியராக பணியாற்றி வந்தார். பின்னர், நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டு சின்னத்திரையில் நுழைந்த அவர், திருமணம் சீரியல் வழியாக பிரபலமடைந்தார்.

அனிதா என்ற கேரக்டரில் நடித்த வித்யா சந்திரனின் நடிப்பு, சின்னத்திரையில் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சில்லுனு ஒரு காதல் தொடரில் மோனிகாவாகவும், கவிதா என்ற கேரக்டரில் பாவம் கணேசன் தொடரிலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு தொடர்களிலும் அவரது கேரக்டர்கள் கவனிக்கப்படும் வகையில் உள்ளன. இந்நிலையில், தன்னுடைய கடந்த கால நினைவுகளை மறக்க முடியாத வித்யா, தான் செவிலியராக இருந்தபோது எடுத்த புகைப்படங்களையும், நர்சிங் படித்தபோது எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், கொரோனா பேரிடர் காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ள அவர், அவர்களின் மகத்தான சேவைக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் நம்பிக்கையின்மை ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில், உங்களின் அன்பு மற்றும் சேவையே அதனை மீட்டு கொண்டு வருவதாகவும் செவிலியர்களை பாராட்டியுள்ளார். உலகம் முழுவதும் மிகப்பெரிய சேவையை ஆற்றி வரும் நீங்களே மிகச்சிறந்த வீரர்கள் எனவும் வித்யா சந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடன் பயின்ற நர்சிங் கல்லூரி தோழிகளின் புகைப்படம் மற்றும் ஆசிரியர்களின் புகைப்படத்தையும் பதிவிட்டு, இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள் தோழிகளே என அவர்களுக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.

திருமணம் சீரியலில் வித்யா சந்திரனுக்கு முன்பு அனிதா கேரக்டரில் ப்ரீத்தி சர்மா நடித்து வந்தார். அவருக்கு சித்தி சீரியலிலும் நடிக்க வாய்ப்பு வந்ததால், இரண்டு சீரியல்களுக்கும் தேதி ஒதுக்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சில மாதங்கள் இந்தப் பிரச்சனை தொடர்ந்து வந்ததால், அனிதா கேரக்டர் ஷெட்யூல் தேதியை மாற்றிக்கொடுக்குமாறு கேட்டுள்ளார். தயாரிப்பு நிறுவனம் அதற்கு மறுத்ததால் திருமணம் சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக அனிதாக கேரக்டருக்கு வித்யா சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது இயல்பான நடிப்பால் கேரக்டரில் முத்திரையும் பதித்தார் வித்யா சந்திரன்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Tamilmalar Natarajan
First published: