ஆதித்ய வர்மாவோடு திரைக்கு வரும் ‘மேகி’ - இந்த வாரம் வெளியாகும் 5 தமிழ்ப் படங்கள்

ஆதித்ய வர்மா
- News18 Tamil
- Last Updated: November 19, 2019, 6:44 PM IST
பிகில், கைதி ஆகிய படங்கள் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் சங்கத் தமிழன், ஆக்ஷன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின.
இந்நிலையில் நவம்பர் 22 அன்று 5 தமிழ்ப்படங்கள் வெளியாகவுள்ளன. ஆதித்ய வர்மா, மேகி, பேய் வாலை பிடிச்ச கைதி, பணம் காய்க்கும் மரம், கே.டி.(எ) கருப்புதுரை ஆகிய 5 படங்கள் இந்த வாரம் திரைக்கு வரும் என தெரிகிறது. இதில் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படம் நல்ல வசூலைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் சந்தீப் வங்கா இந்தப் படத்தை இயக்கி இருந்தார். தற்போது இந்தப் படம் ஆதித்ய வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சந்தீப் வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பனிதா சந்து நடிக்கிறார். அவருடன் இரண்டாவது நாயகியாக நடிகை பிரியா ஆனந்தும் இணைந்துள்ளார்.
சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘மேகி ’. இந்தப் படம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரையும் கவரக் கூடிய வகையில் அமைந்துள்ளது. முழுக்க முழக்க கொடைக்கானல் காட்டு பகுதியையும் அதைச் சுற்றி உள்ள அழகான பங்களாவையும் மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கதை. படத்தில் ரியா, நிம்மி, ஹரிணி ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நவம்பர் 22 அன்று 5 தமிழ்ப்படங்கள் வெளியாகவுள்ளன. ஆதித்ய வர்மா, மேகி, பேய் வாலை பிடிச்ச கைதி, பணம் காய்க்கும் மரம், கே.டி.(எ) கருப்புதுரை ஆகிய 5 படங்கள் இந்த வாரம் திரைக்கு வரும் என தெரிகிறது. இதில் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படம் நல்ல வசூலைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் சந்தீப் வங்கா இந்தப் படத்தை இயக்கி இருந்தார். தற்போது இந்தப் படம் ஆதித்ய வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சந்தீப் வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இந்தப் படத்தை இயக்குகிறார்.