HOME»NEWS»ENTERTAINMENT»notice to the digital company that leaked the actor vijays master movie crime video vai

திரைக்கு வருவதற்கு முன்பே வெளியான மாஸ்டர் பட காட்சிகள்... டிஜிட்டல் நிறுவனத்திற்கு 25 லட்சம் நஷ்ட ஈடுகேட்டு நோட்டீஸ்... (வீடியோ)

திரைக்கு வருவதற்கு முன்பே வெளியான மாஸ்டர் பட காட்சியால் காட்சிகள் வெளியாக காரணமான டிஜிட்டல் நிறுவனத்திற்கு 25 லட்சம் நஷ்ட ஈடுகேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  • Share this:

நடிகர் விஜய் நடிப்பில் ஜனவரி 13 ஆம் தேதி வெளியானது மாஸ்டர் திரைப்படம். ஆனால், இந்த படத்தின் காட்சிகள் திடீரென 11 ஆம் தேதியே இணையத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரத்தில் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளது தயாரிப்பாளர் தரப்பு. மாஸ்டர் லீக் ஆனது எப்படி? பின்னணி என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், மற்றும் விஜய் சேதுபதி, என பிரம்மாண்ட நடிகர் பட்டாளத்துடன் வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால், ரசிகர்களை கடந்து திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஜனவரி 11 ஆம் தேதி படத்தின் ஒரு மணிநேரக் காட்சிகள் சிறிது சிறிதாக இணையத்தில் வெளியாகின. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் வரை வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்



வெளிநாடுகளில் ஒளிபரப்புவதற்காக ஒரு சில நிறுவனங்களிடம் படத்தின் காட்சிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அதில் இலங்கையில் வெளியிட ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த நிறுவனத்திடம் இருந்துதான் படத்தின் காட்சிகள் வெளியானது உறுதி செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தான் காட்சிகளை இணையத்தில் வெளியிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க...ஹேம்நாத் ஜாமினை எதிர்த்து நண்பர் மனு...

இதை தொடர்ந்து காட்சிகள் வெளியான விவகாரத்தில் பொறுப்பாளரான சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்துக்கு, தயாரிப்பாளர் லலித்குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காட்சிகள் வெளியான விவகாரத்தில் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என நோட்டீசில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் எப்படி பதிலளிக்கப் போகிறது? இந்த விவகாரம் நீதிமன்றப் படியேறப் போகிறதா? அல்லது பேச்சுவார்த்தையில் முடிந்து விடுமா என்பது போகப் போகத் தான் தெரியும்.

 



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: