Bigg boss 4 Tamil | கடைசி வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது - வெளியேறப்போவது யார்?
Bigg boss 4 Tamil | கடைசி வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியது - வெளியேறப்போவது யார்?
ஆரி, சோம், ரியோ
இன்று வெளியான முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாமினேஷன் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் நடக்கும் நிலையில் இன்று கடைசி நாமினேஷன் ஓபன் நாமினேஷனாக நடைபெறுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகாரமாக 92 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற ஆரி - பாலாஜி மோதல் குறித்து கமல் சனிக்கிழமை நிகழ்ச்சியில் பேசினார். அப்போது ஆரியை மட்டும் தனியாக அமரவைத்துவிட்டு மற்றவர்களிடம் ஆரியுடன் உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்டார் கமல். ஒவ்வொருவராக தங்கள் பிரச்சனையை கூறினர்.
பாலாஜி பேசுகையில் 'அவர் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருக்கிறார்' என குற்றம்சாட்டினார், அதன் பின் பாலாஜியை கமல் விளாச தொடங்கினார், இரண்டடி ஏறினால் ஒன்றரை அடி சருக்குகிறார் என கிண்டல் செய்தார். மேலும், உங்கள் கோவம் நியாயமானது, ஆனால் நீங்கள் விளக்கும் விதம் தவறாக உள்ளது, மாற்றிக்கொள்ளுங்கள் என புரிய வைத்தார். அதன் பின்னர் எலிமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது. அதில் சோம் , கேபி, ஷிவானி, ரம்யா மற்றும் ஆஜித் இருந்த நிலையில் முதலில் கேபி சேவ் செய்யப்படுவதாக கமல் அறிவித்தார்.
இதனையடுத்து அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறினர். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒவ்வொருவரையும் தனித்தனியே பிரசாரம் செய்ய அழைத்தார் கமல். பொய் சொல்லக்கூடாது, உளரக்கூடாது என்ற கட்டளைகளைகளுடன் தான் எதற்காக பிக் பாஸ் டைட்டிலை பெற தகுதியானவர் என அனைவரும் மக்களிடம் பிரச்சாரம் செய்யலாம் என கூறப்பட்டது, அதன்படி முதலில் வந்த பாலாஜி, தான் கோபத்தை மட்டுமே கண்டு வளர்ந்ததாகவும், சரி தப்பு சொல்லித்தர யாரும் இல்லை என்றும் பேசினார்.
மேலும், பிரச்னை வந்தாலும் அதிலிருந்து நான் மீண்டு வந்துள்ளேன் என கூறினார். இதனை தொடர்ந்து அனைவரும் தங்கள் பிரச்சாரத்தை நடத்தினர். பின்னர் மீண்டும் எலிமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது, அதில் மீதம் 4 பேர் இருந்த நிலையில், சோம், ஷிவானி காப்பாற்றப்படுவதாக கமல் கூறினார். கடைசி இருவரான 'ஆஜித் மற்றும் ரம்யா இருவரையம் ஸ்டோர் ரூம் சென்று ஒரு சூட் கேஸ் எடுத்து வாருங்கள் என கமல் கூறினார். அதில் ரெட் ஸ்டிக்கரில் அஜித்தின் பெயர் இருந்தது, அதனால் ஆஜித் தான் எலிமினேஷன் என கமல் அறிவித்தார்.
அதன் பின் ஆஜித் அனைவரிடமும் விடைபெற்று மகிழ்ச்சியாக வெளியில் வந்தார். மேலும் அவரிடம் இருந்த காயின்ஸ்களை கேபி, ரம்யா மற்றும் பாலாஜி மூவருக்கும் பிரித்து கொடுத்துவிட்டு சென்றார். இந்த நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாமினேஷன் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் நடக்கும் நிலையில் இன்று கடைசி நாமினேஷன் ஓபன் நாமினேஷனாக நடைபெறுகிறது.
அதில், ஆரி முதல் நபராக வந்து ரியோவை நாமினேட் செய்கிறார். நானும் பாலாவும் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு சில விஷயங்களை ரியோ கூறினார். அது குறித்து நான் அவரிடம் விளக்கம் கேட்டபோது அவரது விளக்கம் எனக்கு முரண்பாடாக இருந்தது என கூறுகிறார். அடுத்து வந்த சோம், பாலா மற்றும் ஆரி ஆகிய இருவரையும் நாமினேட் செய்கிறார். அதை அடுத்து நாமினேட் செய்ய வந்த ரியோ, “ஆரியின் மகள் வந்தபோது அவர் ரூல்ஸை பின்பற்றி இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் பார்க்காமல் வேறு எதையோ சொல்கிறார் என என்னை பற்றி தவறாக நினைப்பார்கள். நான் அந்த அளவுக்கு கேவலமானவன் இல்லை” என ரியோ, ஆரிக்கு பதில் அளித்துள்ளார். இதனால் இந்த வாரம் ஆரி மற்றும் பாலாஜி இருவரும் கண்டிப்பாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் யாரெல்லாம் இந்தவார நாமினேஷனில் இருப்பார்கள் என தெரியவரும்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.