விஜயுடன் தனிப்பட்ட வெறுப்பு எங்களுக்கு இல்லை - கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜு | சர்கார் பட போஸ்டர்

Sarkar | சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் தணிக்கை செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
திரைத்துறைக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. நடிகர் விஜயுடன் எங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு எதுவும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சர்கார் பட விவகாரம் தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், “சர்கார் படத்துக்கு எந்த பாரபட்சமும் இன்றி சிறப்புக்காட்சி திரையிட அனுமதி அளித்தோம். மெர்சல் படத்தில் விலங்குகள் துன்புறுத்துவதாக புகார் எழுந்த நிலையில், முதல்வரை அணுகி விஜய் கோரிக்கை வைத்ததால் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது.

நடிகர் விஜயுடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. திரைத்துறைக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. அந்தத் துறையில் நிலவிய பல பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளோம்.  தமிழகத்தில்தான் திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

கிழிக்கப்பட்டிருக்கும் சர்கார் பட பேனர்


சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தேன். பல்வேறு தரப்பினரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கோரினர்.

2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா இலவச திட்டங்களை அறிவித்தார். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டனர். வில்லிக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரை வைத்ததால் உணர்வுப்பூர்வமான தொண்டர்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க விஜயிடம் பேசினேன். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் பிரச்னை தீர்ந்தது” என்று தெரிவித்தார்.

Also See..

Published by:Sankar
First published: