Home /News /entertainment /

நிவின் பாலி நடித்துள்ள 'காயம்குளம் கொச்சுன்னி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நிவின் பாலி நடித்துள்ள 'காயம்குளம் கொச்சுன்னி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

காயம்குளம் குச்சுன்னி படத்தில் நிவின் பாலி, ,மோகன்லால்.

காயம்குளம் குச்சுன்னி படத்தில் நிவின் பாலி, ,மோகன்லால்.

  • News18
  • Last Updated :
    நிவின் பாலியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீரியட் ஃபிலிம் வகையை சேர்ந்த 'காயம்குளம் கொச்சுன்னி' படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மலையாள பட உலகின் முன்னனி ஸ்டாராக திகழ்பவர் நிவின் பாலி. இவர் நேரம் படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் நடித்த பிரேமம் படம் மலையாளத்தில் வெளியானாலும் தமிழில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு நிவின் பாலிக்கு தமிழில் தனி ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது. இந்நிலையில் நிவின் பாலி நடித்துள்ள பையோ பிக்கான `காயம்குளம் கொச்சுனி’ வரும் அக்டோபர் 17-ம் தேதி வெளிவரும் என படக்குழு அறிவித்துள்ளது.

    மலையாள ராபின் ஹுட்டாக கருதப்படும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த காயம்குளம் கொச்சுனியின் கதை திரைப்படமாவதால் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த்கியுள்ளது. இந்த படத்தை ரோஷன் ஆண்டிரிவ்ஸ் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் மோகன்லால் 'இதிகாரபக்கி' என்ற கதாபாத்திரத்தில் கவுர வேடத்தில் நடித்துள்ளார். நடிகை பிரியா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்த படம் 45 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மலையாள பட உலகிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Kayamkulam Kochunni, Kayamkulam Kochunni Release Date, Mohan Lal Nivin Pauly, Nivin Pauly, Nivin Pauly Next

    அடுத்த செய்தி