• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • யோகி பாபு படத்துக்கு நித்யானந்தா நோட்டீஸ்!

யோகி பாபு படத்துக்கு நித்யானந்தா நோட்டீஸ்!

யோகி பாபு | நித்யானந்தா

யோகி பாபு | நித்யானந்தா

  • News18
  • Last Updated :
  • Share this:
    யோகி பாபு நடித்த பப்பி படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி நித்யானந்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    யோகி பாபு, வருண் நடிப்பில் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பப்பி. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜானிசின்ஸ் என்ற ஆபாச நடிகர் ஒருபக்கமும் மற்றொரு பக்கத்தில் நித்தியானந்தாவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அமைப்பைச் சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

    அந்த புகாரில், அமெரிக்காவில் முழு நீல நிர்வாண படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவரையும், இந்து மத பிரசாரங்கள், போதனைகள் வழங்கும் சுவாமி நித்யானந்தாவையும் இணைத்து பப்பி படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர் மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழுவினர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



    இந்நிலையில் தற்போது நித்யானந்தா தரப்பிலிருந்து படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் நித்யானந்தாவை தரக்குறைவாக விமர்சிக்கும் வகையில் அமைக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



    வீடியோ பார்க்க: இணையத்தை கலக்கும் ரம்யா பாண்டியன் பேட்டி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: