• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாலிவுட்டில் கால்பதிக்கும் `மெர்சல்’ நாயகி!

பாலிவுட்டில் கால்பதிக்கும் `மெர்சல்’ நாயகி!

நடிகை நித்யா மேனன்

நடிகை நித்யா மேனன்

மெர்சல் படத்தின் நாயகிகளுள் ஒருவரான  நித்யா மேனன் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மெர்சல் படத்தின் நாயகிகளுள் ஒருவரான  நித்யா மேனன் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழில் காஞ்சனா 2, ஓகே கண்மணி, 24, இருமுகன், மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் நித்யாமேனன், தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மெர்சல் படத்துக்கு பிறகு ‘தி அயர்ன் லேடி’ எனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் நடிக்க இருக்கிறார்.

    இந்நிலையில் நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கும் மிஷன் மங்கள் என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் நிகழ்வுகளை மையமாக வைத்து இந்தப் படம் ஒரு விண்வெளி படமாக உருவாக இருக்கிறது.

    இயக்குநர் ஜெகன்ஷக்தி இயக்கும் இந்தப் படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதற்கான அறிவிப்பை நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ 'மிஷன் மங்கள்' குழுவை பாருங்கள், எங்களுடைய சுப மங்கள யாத்திரைக்கு வாழ்த்து கூறுங்கள்” என்று கூறியுள்ளார்.





    மேலும் இந்தப் படத்தில் வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, தப்ஸி பன்னு என பாலிவுட்டின் முன்னணி நடிகைகளும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதத்தின் மத்தியில் துவங்க இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: