Kadaikutty Singam: கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிகை நிமிஷிகா - வெளியான புகைப்படம்!

நடிகை நிமிஷிகா

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், சீரியலில் குடும்ப பெண்ணாகவும், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியில் கலக்குகிறார்.

  • Share this:
கடந்த ஆண்டு தொடங்கிய கண்ணான கண்ணே சீரியலில் நிமிஷிகா மற்றும் ராகுல் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். பப்ளு, டெல்னா டேவிஸ், நித்யா தாஸ், பிரியங்கா நல்கரி, ரேஷ்மா, நித்யா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 100வது எபிசோடை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த சீரியலை இயக்குநர் தனுஷ் இயக்கி வருகிறார். காதல் மற்றும் குடும்பத்தை கதைக்களமாக கொண்டு நகரும் கண்ணானே கண்ணே சீரியலுக்கு பாரதி கண்ணன் திரைக்கதை எழுதி வருகிறார்.

இந்நிலையில் நடிகை நிமிஷிகா கண்ணான காணே சீரியலுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் நடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை நிமிஷிகா, தற்போது கண்ணான கண்ணே சீரியல் மூலம் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைக்குட்டி சிங்கம் சீரியல் தொடரில் பகல் நிலவு சீரியலில் நடித்த முஹம்த் அஸீம் மற்றும் கண்மணி சீரியலில் நடித்த இரா அகர்வால் இருவரும் மருது மற்றும் மீனாட்சி என்ற காதாபாத்திரத்தில் நடித்தனர். அண்ணன் முத்து கதாபாத்திரத்தில் வேலு லட்சுமணன் என்ற புதுமுக நடிகர் நடித்தார். அது ஒரு கிராமத்துக் கதை கொண்ட தொடர். முத்து, மருது என்ற இரு பாசக்கார அண்ணன் தம்பிகளுக்குள் மீனாட்சி என்னும் அழகான பெண் வரும்போது நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து கதை நகர்ந்தது. 20 ஜூலை 2019ம் ஆண்டு அன்று 113 எபிசோட்ஸ்சுடன் இந்த சீரியல் நிறைவு பெற்றது.

அதில் நிமிஷிகா நடித்திருக்கும் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், சீரியலில் குடும்ப பெண்ணாகவும், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியில் கலக்குகிறார். லாக்டவுனில் வீட்டில் இருக்கும் நிமிஷிகா, கவர்ச்சியான புகைப்படம் மற்றும் சேலையில் வீடியோ என பதிவேற்றி வருகிறார்.



சமீபத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் சாட் பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோவை ஷேர் செய்திருந்தார். அதில் உங்களை அதிகம் தொந்தரவு செய்யும் நபர் யார் என? கேள்விக்கு பதில் அளிக்கும் நிமிஷிகா, கண்ணான கண்ணே சீரியலில் தனக்கு ஜோடியாகவும், ஹீரோவாகவும் நடிக்கும் ராகுல் என கூறுகிறார்.சன் டீவியில் நிறைய சீரியல்கள் ஒளிரப்பாகி வந்த நிலையில், கொரோனா காரணமாக அதன் சூட்டிங் நிறுத்தப்பட்டன.

Also read... Dhanush: புதிய வீட்டிற்கு 150 கோடி செலவிடும் தனுஷ்...?

சில சீரியல்களின் சூட்டிங் இன்டோரில் நடத்தப்பட்டது. குறிப்பாக, சன் தொலைக்காட்சியின் அலுவலகத்திலேயே நடத்தப்பட்டது. நடிகர், நடிகைகளும் கொரோனா அச்சம் காரணமாக சீரியல் சூட்டிங்கில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது சூட்டிங்கில் இணைந்துள்ளன. கண்ணான கண்ணே சீரியலிலும் சில நடிகர்கள் மட்டுமே சூட்டிங்கில் பங்கேற்றதால், அவர்களை வைத்து மட்டுமே கதைக்களம் நகர்ந்து கொண்டிருந்தது. அனைத்து நடிகர்களும் தற்போது படப்பிடிப்புக்கு வரத் தொடங்கியுள்ளதால், கதைக்களங்கள் மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: