'நடிப்பதற்கு முன்பு எப்படி இருந்தேன் தெரியுமா?' நிலா சீரியல் நடிகையின் உருக்கமான பதிவு!

நிலா சீரியல்

வி.ஜேவாக தொலைக்காட்சியில் பணியாற்றிய பவித்ரா, சூரிய வணக்கம், வணக்கம் தமிழா, தமிழச்சி ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

  • Share this:
நடிப்பதற்கு முன்பு தன் வாழ்க்கையில் சந்தித்த சில கஷ்டமான தருணங்களை நிலா சீரியலில் நடிக்கும் பவித்ரா நினைவு கூர்ந்துள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை பவித்ரா, படிப்புக்குப் பிறகு மாடலிங் துறையில் புகுந்தார். கவர்ச்சிகரமான புகைப்படங்களை எடுத்து வைரலான அவர், 2017 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தையும் வென்றுள்ளார். தர்பூசணி பழங்களை வைத்து, கவர்ச்சியின் உச்சத்தில் பவித்ரா எடுத்த புகைப்படம், பரபரப்பாக பேசப்பட்டது.

பின்னர் பிரபலங்கள் கலந்து கொண்ட சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நன்கு அறிமுகமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ‘சொப்பன சுந்தரி’ பவித்ரா என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு பிரபலமானார்.

ALSO READ | ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை!

இதனையடுத்து வி.ஜேவாக தொலைக்காட்சியில் பணியாற்றிய பவித்ரா, சூரிய வணக்கம், வணக்கம் தமிழா, தமிழச்சி ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'சர்க்கார்' உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன ரோல்களிலும் நடித்துள்ளார்.

தற்போது சன்டீவியில் ஒளிபரப்பாகும் ‘நிலா’ சீரியலில் அக்மார்க் குடும்ப பெண்ணாக நடித்து வருகிறார். புகைப்படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய பவித்ராவா இது? என அனைவரும் கேட்கும் வகையில் லீட் ரோலில் அசத்தி வருகிறார்.

ALSO READ |  சென்னை மக்களை நம்பி வந்து ஜெயித்தேன்.. விஜய் டிவி சுனிதாவின் வெற்றி பயணம்!

அவருடன் ராஜ் ரவிச்சந்திரன் கதாநாயகனாகவும் ஸ்ரீதர், ராஜீவ் ரவிச்சந்திரா, கவிதா சோலைராஜன், ஸ்ரீதேவி அசோக், ஷர்மிதா கவுடா, ஜீவா ரவி, சாதனா உள்ளிட்டோர் மற்ற கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிலா சீரியல் ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

திருமணமான பெண் குடும்ப வாழ்க்கையிலும், லட்சியத்திலும் சரிசமமாக பயணித்து எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை கதையின் முக்கிய கரு. இதில் நிலாவாக நடிக்கும் பவித்ரா அசதுக்கிறார்.

ALSO READ | அம்மாடி வெண்பா உன் பாட்சா சவுந்தர்யாம்மா கிட்ட பலிக்குமா? பல்பு வாங்குன மொமண்ட்!

சோஷியல் மீடியாக்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். சினிமாவில் நுழைவதற்கு முன்பு, பின்பு எதிர்கொண்ட சவால்களை கூறும் அவர், அண்மையில் மீம் ஒன்றுக்கு கொடுத்த சுவாரஸ்யமான பதில் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.



பிஞ்ச செருப்பில் ஊக்கு குத்தியிருப்பதை போன்ற மீமுக்கு ரியாக்ட் செய்துள்ள பவித்ரா, தனக்கும் இதுபோன்ற அனுபவம் இருப்பதாக கூறியுள்ளார். நடிகையாக வலம் வரும் இவருக்கு கூட இந்த அனுபவம் இருக்கிறதா? என வியப்புடன் கேட்டுள்ளனர். வி.ஜே பவித்ராவை மாடலிங் துறைக்கு அழைத்துச் சென்றது, அடிக்கடி சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கும் மீரா மிதுன் என கூறப்படுகிறது.

ALSO READ | கண்ணனை தலை முழுகிய மூர்த்தி - இழுத்து மூடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டு கதவு

இது குறித்து அவரும் தன்னுடைய பேட்டிகளில் வெளிப்படையாக கூறியுள்ளார். மாடலிங் துறையில் இருந்து வி.ஜேவாக பணியாற்றி, தற்போது நடிகையாக இருக்கும் பவித்ராவுக்கு இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: